பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு புதிய அமைச்சரவைப் பட்டியல் தொடர்பில் யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா நாளை நண்பகல் கோலாலம்பூர் இஸ்தானா நெகாராவில் பேட்டி அளிக்கிறார்.
அமைச்சரவைப் பட்டியலுக்கு மாமன்னருடைய அங்கீகாரத்தை பெறுவது அந்தப் பேட்டியின் நோக்கமாகும்.
பிரதமர் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கும் துணை அமைச்சர்களுக்கும் வியாழக் கிழமை காலை மணி 9.30 வாக்கில்
பதவி நியமனக் கடிதங்களை வழங்கவும் அவர்கள் பதவி உறுதிமொழியையும் ரகசியக் காப்பு
உறுதிமொழியையும் எடுத்துக் கொள்ளவும் யாங் டி பெர்துவான் அகோங் இணங்கியுள்ளதாகவும் அந்த
அறிக்கை மேலும் தெரிவித்தது.
பெர்னாமா
இந்த பொது தேர்தலுக்கு பின் அமையும் அமைச்சரவையில் இந்தியர்கள் மகிழும் வகையில் 4 முழு அமைச்சர் 4 துணை அமைச்சர் கொடுக்க பிரதமர் வளி வகுக்க வேண்டும். அது மற்றும் இன்றி இந்தியர்களின் பிரச்சனைகளை கண்டறிய ஒரு சிறப்பு குழு அமைக்க வேண்டும் அதில் அணைத்து இந்திய கட்சி தலைவர்களும் அங்கம் அமைக்க வேண்டும் . இது நேரடி பிரதமர் பார்வையில் கில் இருக்க வேண்டும் .அப்படி அமையும் என்றால் இந்தியர்களுக்கு இந்த அரசின் மீது அதிக நம்பிக்கை வரும் …இதை செய்வார்களா