டோங் ஸோங்: கல்வியாளருக்கும் முன்னாள் நீதிபதிக்கும் எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

1dong songசீனக் கல்வி பாதுகாப்புக்குழுவான டோங் ஸோங், தேர்தல் முடிவுகள் தொடர்பில் “இனவாத, தீவிரவாத” கருத்துகளை மொழிந்துள்ள யுஐடிஎம் இணை வேந்தருக்கும் ஒரு முன்னாள்-நீதிபதிக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

1 dong song1யுஐடிஎம் இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட்டும் (இடம்) முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முகம்மட் நூர் அப்துல்லாவும் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியபோது, தேசிய ஒற்றுமைக்காக பன்மொழிப் பள்ளிகளை ஒரேமொழி பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர்.

முகம்மட் நூர் இன்னொன்றையும் சொன்னார். சீன மலேசியர்கள் அரசியல் அதிகாரத்தைப் பறித்துக்கொள்ள முற்பட்டதற்காக  மலாய்க்கார்களிடமிருந்து கடுமையான எதிர்விளைவுகளை எதிர்நோக்குவர் என்றும் எச்சரித்தார்.

“அவ்விருவரும் தெரிவித்த தீவிரவாத கருத்துகளை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர்களின் கருத்துகள் தேசிய ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிப்பவை”, என்று டோங் சோங் இன்று ஓர் அறிக்கையில் கூறியது.