ஆய்வு: 81 விழுக்காட்டினர் அன்வார் அரசியலிலிருந்து விலகுவதை விரும்புகின்றனர்

1 edgeமே 5 பொதுத் தேர்தலில் அரசாங்கத்தைக் கைப்பற்றாதால் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் அரசியலை விட்டு விலக வேண்டும். ஆய்வு ஒன்றில் பங்கேற்றவர்களில் 81.62 விழுக்காட்டினர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இணைய வர்த்தக செய்தித்தளமான தி எட்ஜ், இணையவழி மேற்கொண்ட ஆய்வில் கலந்துகொண்ட 12,736 பேரில் 10,396 பேர் அன்வார் ‘சூளுரைத்தபடி அரசியலிலிருந்து விலக வேண்டும்’ என்பதை ஒப்புக்கொண்டனர்.

1 edge1எஞ்சிய 18.38 விழுக்காட்டினர், 2008-இல் வென்றதைவிட இம்முறை பக்காத்தான் கூடுதல் இடங்களைப் பெற்றிருப்பதால் அன்வார் பக்காத்தான் தலைவராக தொடர்ந்து இருக்க வேண்டும் என்றனர்.

அந்த ஆய்வில், ‘13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றவில்லை. அப்படியானால், அன்வார் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா?’ என்று கேட்கப்பட்டது.

1 edge 2பொதுத் தேர்தலுக்குமுன், அன்வார், பக்காத்தான் வெற்றிபெறாவிட்டால் அரசியலைவிட்டு விலகி விரிவுரையாளராகப் பணியாற்றப்போவதாய் அடிக்கடி கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தேர்தலுக்கு மறுநாள் மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் அன்வார், தம் பணி “இன்னும் முடியவில்லை”, எனவே விலகப்போவதில்லை என்றார்.

தேர்தலில் மோசடி நடந்து பக்காத்தானிடமிருந்து வெற்றி “திருடப்பட்டுவிட்டது” என்பதில் அன்வார் விடாப்பிடியாக இருக்கிறார். அதற்குக் கண்டனம் தெரிவிக்க அக்கூட்டணி நாடு முழுக்க பேரணிகளை நடத்தி வருகிறது.