அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பேரணி நடத்தப்பட வேண்டும் என சில போராளிகள் வேண்டுகோள் விடுத்ததிலிருந்து பக்காத்தான் ராக்யாட் ஒதுங்கிக் கொண்டுள்ளது.
பக்காத்தான் கட்சிகள் அந்த யோசனை பற்றி சிந்திக்கவே இல்லை என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
“அந்த யோசனை எங்களுக்குச் சமர்பிக்கப்படவில்லை. பக்காத்தான் ராக்யாட் அதனை விவாதிக்கவே இல்லை.”
“பக்காத்தானும் மற்ற சம்பந்தப்பட்ட அரசு சாரா அமைப்புக்களும் ஏற்பாடு செய்துள்ள அமைதியான
பேரணிகளில் மட்டுமே பக்காத்தான் முழுக்க முழுக்க சம்பந்தப்பட்டுள்ளது,” என அன்வார் இன்று
நிருபர்களிடம் கூறினார்.
தேர்தல் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து அரசாங்கத்தை வீழ்த்தும்
நோக்கத்துடன் இந்த வாரம் சனிக்கிழமை ‘ஒரு மில்லியன் மக்கள்’ பேரணியை நடத்தும் யோசனையை
அண்மையில் நிகழ்ந்த கூட்டம் ஒன்றில் சில போராளிகள் தெரிவித்திருந்தனர்.
(இன்னும் தொடரும்)