மஇகா இளைஞர் பிரிவு: வேதாவுக்குப் பதில் ஐபிஎப்-பிற்கு கொடுத்திருக்கலாம்

waythaபிஎன் கூட்டணிக்கு விசுவசமாக உள்ள பங்காளிக் கட்சிகளுக்குக் கொடுக்காமல் பி வேதமூர்த்தி துணை  அமைச்சராக நியமிக்கப்பட்டது மீது மஇகா இளைஞர் பிரிவு ஏமாற்றம் தெரிவித்துள்ளது.

“நாட்டின் தோற்றத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்திய அந்த மனிதர் நியமிக்கப்பட்டதால் மஇகா, பிஎன் -னில் உள்ள மற்ற இந்தியப் பேராளர்கள் நிலைமை பலவீனமடையும்.”

“ஐபிஎப் என்ற இந்தியர் முன்னேற்ற முன்னணி உறுப்பினர்களைக் கூட பிரதமர் அரசாங்கத்தில் உயர்  பதவிகளுக்கு பரிசீலினை செய்திருக்கலாம். ஐபிஎப் கடந்த 25 ஆண்டுகளாக பிஎன் -னுக்கு விசுவாசமாக இருந்து வருகின்றது.”

“வேதமூர்த்தியைக் காட்டிலும் நல்ல தேர்வுகள் பிஎன் -னுக்குள் இருப்பதாக நான் உறுதியாக
நம்புகிறேன்,” என மஇகா இளைஞர் தலைவர் டி மோகன் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்தார்.

பிரதமர் புதன் கிழமை அறிவித்த அமைச்சரவைப் பட்டியலில் வேதமூர்த்தி பிரதமர் துறையில் துணை
அமைச்சராக பெயர் குறிப்பிடப்பட்டார்.waytha2

‘பிஎன் -னில் கடந்த 55 ஆண்டுகளாக பங்காளிக் கட்சியாக இருக்கும் மஇகா-வுடன் வேதமூர்த்தி  நியமனம் குறித்து விவாதிக்கப்படவில்லை- இது பிஎன் -னில் அந்தக் கட்சியின் நிலையைக்  கேள்விக்குறியாக்கியுள்ளது.”

“பிஎன் எந்த அளவுக்கு மஇகா-வை மதிக்கிறது என்பதே இப்போதைய கேள்வி.” என மோகன்  சொன்னார்.

மோசமான முன்னுதாரணம்

இவ்வாண்டு தொடக்கத்தில் வேதமூர்த்தி மேற்கொண்ட 21 நாள் உண்ணாவிரதப் போராட்டம்  உண்மையானது அல்ல என்றும் மோகன் கருதுகிறார்.

“தே ‘ஒ’, பிஸ்கட் ஆகியவற்றுடன் 21 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் இருந்த ஒருவருக்கு துணை  அமைச்சர் பதவி கிடைக்க வேண்டுமா என்பது தான் என்னுடைய கேள்வியாகும்.”

“நாம் இது போன்ற நாடகத்தை அனுமதிக்கக் கூடாது. இல்லை என்றால் எதிர்காலத்தில் அது ஒரு
பண்பாடு ஆகி விடும்,” என்றார் மோகன்.