கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், மலேசிய-பிலிப்பினோ பெற்றோரைக் கொண்ட 14-வயது யனீஷாவின் குடியுரிமை விவகாரத்துக்குத் தீர்வுகண்டு அவருக்கு குடியுரிமை வழங்கும் வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராயும்படி தேசியப் பதிவுத் துறைக்கும் (என்ஆர்டி) உள்துறை அமைச்சுக்கும் உத்தரவிட்டுள்ளது.
என். யனீஷாவின் குடும்பத்தார் இன்று நீதிமன்றத்தில் உறுதிமொழி ஆவணம் ஒன்றைத் தாக்கல் செய்ததை அடுத்து நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.
முன்னதாக, அக்குடும்பத்தார் அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி டிஎன்ஏ சோதனை ஒன்றையும் செய்தனர். அச்சோதனையில் எஸ்.நந்தகுமார்தான் அவரின் தந்தை என்பது நிறுவப்பட்டது. நந்தகுமார் ஒரு மலேசியர்.
தங்கள் உறுதிமொழி ஆவணத்தில் அவர்கள், டிஎன்ஏ சோதனைகளுக்குச் செல்லாமலேயே, வங்காள தேசிகள், இந்தோனேசியர்கள், சூலுக்கள் போன்றோருக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினர்.
நீதிபதி ரொஸிலா யோப் இவ்வழக்கு விவகாரத்தை வழக்குரைஞர் அன்னாவ் சேவியருக்கும் (இடம்) அரசுத்தரப்பு வழக்குரைஞர் மைசாரா ஜுஹாரிக்கும் தம் அறையில் விவரித்து ஜூலை 31-இல் அது விசாரிக்கப்படும் என்றார்.
“எதிர்வாதிகள்(அரசாங்கம், உள்துறை அமைச்சு, என்ஆர்டி) யனீஷாவின் விண்ணப்பத்தை இரத்துச் செய்ய மனு செய்வது பற்றி முடிவெடுக்கவே இக்கால அவகாசம். யனீஷாவின் விண்ணப்பம், அதை அரசு இரத்துச் செய்ய விரும்புகிறதா அல்லது தீர்வுகாண விரும்புகிறதா என்பதைப் பொறுத்துள்ளது”, என சேவியர் நீதிமன்றத்துக்கு வெளியே கூறினார்.
யனீஷா (வலம்) தன் அத்தை எஸ்.யோகேஸ்வரி மூலமாக இவ்வாண்டு தொடக்கத்தில் அவ்வழக்கைப் பதிவு செய்தார்.
அவர் பிறந்தது சிலாங்கூர், பண்டார் சன்வே-இல். அவரின் தாயார் ஒரு பிலிப்பீனோ என்பதால் யனீஷாவின் பிறப்புச் சான்றிதழில் அவர் குடியுரிமை-இல்லாதவர் எனக் குறிக்கப்பட்டது.
இதன் விளைவாக அவர் பள்ளியில் சேர்வதிலும் தேர்வுகள் எழுவதிலும் பிரச்னைகளை எதிர்நோக்கினார். இப்போது குடிநுழைவுத் துறையில் ஒவ்வோர் ஆண்டும் மாணவர் நுழைவு அனுமதி பெற்றுத்தான் அவர் கல்வி பயின்று வருகிறார்.
அவரின் பெற்றோர் பிரிந்து பாட்டி மற்றும் அத்தைகளின் பராமரிப்பில் விடப்பட்ட பின்னர் அவரது நிலைமை மேலும் மோசமடைந்தது.
சாமிவேலு, ஹிஷாமுடின் ஆகியோராலும் உதவ முடியவில்லை
அவரின் அத்தைகள் முன்னாள் மஇகா தலைவர் ச.சாமிவேலுவையும் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ஹிஷாமுடின் உசேனையும் சந்தித்து உதவி கேட்டனர். ஆனால், அதுவும் பயனளிக்கவில்லை.
கடைசி முயற்சியாக, வழக்கு தொடுக்க முடிவெடுத்தனர்.
கூட்டரசு அரசமைப்பின் பகுதி 14(1), 15(2), 15ஏ ஆகியவற்றின்கீழ் யனீஷாவுக்கு மலேசிய குடியுரிமையும் மைகார்டும் வழங்கப்பட வேண்டும் என்றும் தேசிய பதிவுச் சட்டப்படி அவரைப் பதிவு செய்ய வேண்டுமென்று என்ஆர்டிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த பெண்ணின் தந்தை ஒரு மலைக்கரராக இருந்துருந்தால் உடன குடிஉரிமை கிடைதுருக்கும்..
பாவம்… தொடர்ந்து போராட வேண்டிய அவல நிலை….!!!
இதை தான் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் , ஒருதலை பட்ச நிர்வாகம் ………..
திரு
புதிய மாண்டோர்
வேதமுர்த்தியிடம்
செல்லவும்
. அவன் புடிங்கி
கொடுப்பான்
இனி கவலை வேண்டாம்,நம் வேத இருக்கிறார் நம் சமுதாயம் பிரசினை தீர்க்க….
இந்நாட்டில்தான் பூமிபுத்ரா,பூமிபுத்ரா அல்லாதார் பாரபட்சம் உள்ளது,மேலை நாடுகளில் இப்படிப்பட்ட பாரபட்சம் இல்லை.நாட்டின் நலனுக்காக பூமிபுத்ரா அல்லாதார் கடுமையாக உழைக்கவேண்டும் ஆனால் சலுகை என்றதும் பாரபட்சம் தலை தூக்கி நிற்கும்.இப்படிப்பட்ட ஒருதலைபட்ச அரசாங்கத்திற்கு தமிழனும் துணைபோகிறான் என்பதை நினைக்கும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே.
இந்த பாவத்தையெல்லாம் எங்கட கொண்ட சேர்க்க போறீங்க நமது தலைசிறந்த அரசியல்வியாதிகளே… இந்தமாதிரி அடிப்படை பிரச்சனையை தீர்ப்பதை விட வேறு என்னத்த புடுங்கற வேலை உங்களுக்கு….
மலேசிய மாணவர்கள் பிற நாடுகளில் மேற்கல்வி படிக்க செல்லும்போது அந்த நாடுகள் இம்மாதிரியான கேள்விகளை தொடுப்பதில்லையே ! அப்துல்லாவுக்கு சிறப்பு சலுகைகள் கிடைகப்பெரின் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள் இவ்வளவு காலம் !
வேதமூர்த்தி களத்தில் இறங்கியிருக்கிறார். இதனை நாம் அவர் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. பத்திரிக்கைச் செய்திகளை வைத்தே இந்தப் பிரச்சனையை அவர் கையிலெடுக்க வேண்டும்! என்ன செய்கிறார் என்று பார்ப்போம்!