தர்மேந்தரன் மரணம் கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது

போலீஸ்N.Dharmendran5 தடுப்புக் காவலில் இருந்த தர்மேந்தரனின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு பெடரல் போலீஸ் தலைமையகம் ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது என்று கோலாலம்பூர் சிபிஒ முகமட் சாலே இன்று பின்னேரத்தில் கூறினார்.

தர்மேந்தரன் உடல் மீது மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனையில் அவர் மீது “கிரிமினல் பலாத்காரம்” பயன்படுத்தப்பட்டுள்ளது வெளிவந்துள்ளது. ஆகவே, இவ்வழக்கு தற்போது கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். ஆனால், தர்மேந்தரன் உடலில் காணப்பட்ட காயங்கள் குறித்து எதுவும் கூற அவர் மறுத்து விட்டார்.

“இச்சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு நான் எனது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். போலீஸ் இவ்விவகாரத்தைக் கடுமையானதாகக் கருதுகிறதுcpo mohamad Salleh (என்று உறுதியளிக்கிறேன்).

“போலீஸ் இந்த விசாரணையை வெளிப்படையாக நடத்தும் என்றும், அவரைக் கைது செய்து விசாரித்த போலீஸ் அதிகாரிகளைப் பாதுகாக்காது என்றும் நான் அவரது குடும்பத்திற்கும் பொதுமக்களுக்கும் உத்தரவாதம் அளிக்கிறேன்”, என்று முகமட் சாலே கூறினார்.

ஒரு சண்டையில் சம்பந்தப்பட்டிருந்ததற்காக மே 11 இல் தர்மேந்தரன் கைது செய்யப்பட்டார். கோலாலம்பூர் போலீஸ் தலைமையக தடுப்புக் காவல் நிலையத்தில் அவர் மே 21 மரணமடைந்து விட்டதாக முன்பு கூறப்பட்டது.