மலேசிய அடையாளக் கார்டுகளையும் வாக்களிக்கும் உரிமையையும் பெறவிருப்பதாக கூறப்பட்ட- அந்நியர்கள் என தாங்கள் சந்தேகிக்கும் 200 பேர் கொண்ட குழு ஒன்றை புத்ராஜெயாவில் உள்ள தேசா ஸ்ரீ புத்ராவைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.
கூட்டரசு நிர்வாகத் தலைநகருக்கு அருகில் உள்ள ஒய்வுத் தலம் ஒன்றில் குடியிருப்பாளர்கள் அந்தக் குழுவைச் சுற்றி வளைத்துக் கொண்டதாக பாஸ் இளைஞர் பிரிவு நிர்வாகக் குழு உறுப்பினர் முகமட் அட்ராம் மூசா கூறினார்.
அந்த விஷயம் குறித்து பாஸ் கட்சித் தொண்டர்களிடமிருந்து தமது கட்சிப் போராளிகளுக்கும் தேசா ஸ்ரீ புத்ரி குடியிருப்பாளர்களுக்கும் தகவல் கிடைத்ததாக அவர் சொன்னார்.
முகமட் அட்ராம், பாஸ் இளைஞர் பிரிவின் ஜனநாயக மறுவாழ்வு, மக்களை ஒன்று திரட்டும் பிரிவின் துணைத் தலைவரும் ஆவார்.
அவர்கள் இன்று காலை மணி 7.30 தொடக்கம்- சந்தேகத்துக்குரிய அந்நியர்களை ஏற்றிச் செல்வதாக கூறப்பட்ட ஆறு பஸ்கள் அந்த ஒய்வுத் தலத்தை அடையும் வரையில் பின் தொடர்ந்து சென்றனர்.