புதிய குறைந்த கட்டண விமானப் பயண முனையமான கேஎல்ஐஏ2-இன் கட்டுமானச் செலவையும் அது ஏன் கட்டிமுடிக்கத் தாமதமாகிறது என்பதையும் போக்குவரத்து அமைச்சும் மலேசிய விமான நிலையங்கள் ஹோல்டிங் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) டும் தெரியப்படுத்த வேண்டும் என பக்காத்தான் ரக்யாட் கோரியுள்ளது
மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையில் அம்முனையம் இவ்வாண்டு ஜூன் மாதம் கட்டி முடிக்கப்படும் என்று அறிவித்துவிட்டு தேர்தலுக்குப்பின் அது கட்டிமுடிக்கப்படுவது காலவரையின்றி தாமதமாகும் என்று அறிவித்துள்ள எம்ஏஎச்பியைத் “திறமையற்ற பொய்யர்கள்” என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவாவும் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வாரும் வருணித்தார்கள்.
அம்முனையத்தை முதலில் ரிம1.7 பில்லியன் செலவில் 2011 செப்டம்பருக்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டிருந்ததையும் பின்னர் 2012 செப்டம்பரில் அதன் கட்டுமானச் செலவு ரிம4 பில்லியனாக எகிறி விட்டதையும் புவா சுட்டிக்காட்டினார்.
“அது கட்டி முடிக்கப்படும்போது செலவு ரிம5 பில்லியன் என்ற நிலையை அடைந்தால்கூட ஆச்சரியப்பட மாட்டோம்”, என்றவர், அதேபோல் அதைக் கட்டிமுடிக்க அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஆனால்கூட வியப்படையப் போவதில்லை என்றார்.
காரணம் நம் ஏற் ஆசியாவுக்கு ஆப்பு வைத்தல் இப்படிதான் தாமதம் ஆகும்…
தாமதம் செய்தால் தாராளமாக காசு பண்ணலாம் ! BN அரசுக்கு சொல்லியா தரனும் ?
அடேய் அப்பா! ரிம1.7 பில்லியன் செலவில் முடிய வேண்டிய வேலை ரிம4 பில்லயொனை தொட்டும், இன்னும் வேலை முடியவில்லையா? பிஎன் காரன்கள் எப்படியெல்லாம் மக்கள் பணத்தை விரயமாக்குகின்றன்கள் பாருங்கள்? இப்படி பட்ட ‘திறமையான நிர்வாகத்தினர்’ கையில் ஆட்சி நீடித்தால் வெகு விரைவில் மலேசியா திவால் ஆவதை ஆண்டவனாலும் தடுக்க முடியாது… ஊழல் பெருச்சாளிகள்??