தடுப்புக் காவல் மரணங்களைத் தடுக்க போலீசிலேயே தனி வாரியம் அமைக்கும் ஆலோசனை அபத்தமானது என்று ஒதுக்கித் தள்ளும் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங், தேவை போலீஸ் புகார்கள் மற்றும் ஒழுக்கக்கேட்டை விசாரிக்கும் சுயேச்சை ஆணையம் (ஐபிசிஎம்சி) தான் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) காலிட் அபு பக்கார் தலைமையில் செயல்படும் என்று கூறப்படும் அவ்வாரியம் திருப்திகரமானதல்ல, ஏற்கத்தக்கதல்ல என்று லிம் கூறினார்.
“பதவியேற்ற முதல் வாரத்திலேயே ‘வரலாற்றில் மிகவும் அரசியல் சார்ந்த ஐஜிபி’ என்று காண்பித்துக் கொண்டுள்ள அவர், ஆட்சியில் உள்ள அரசைக் காக்கத்தான் முன்னுரிமை கொடுக்கிறாரே தவிர, மலேசியர்களைக் குற்றச்செயல்களிலிருந்து காப்பாற்றுவதற்கோ மலேசியர்களுக்குக் கருத்துச் சொல்லவும் அமைதியாக ஒன்றுகூடவுமுள்ள அடிப்படை மனித உரிமைகள் பற்றியோ கவலைப்படுவதில்லை……
“மலேசியர்களுக்கு இந்த ஐஜிபி மீதோ, தடுப்புக் காவல் மரணங்களைத் தடுப்பதற்கான போலீஸ் தனிக்குழு மீதோ நம்பிக்கை இல்லை”, என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.
போலீசில் அதிகார அத்துமீறலையும் ஊழலையும் விசாரிக்க விரிவான அதிகாரத்துடன் ஐபிசிஎம்சி அமைக்கப்பட வேண்டும் என 2005-இல் அரச விசாரணை ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
ஆனால், போலீஸ் படை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதற்குப் பதிலாக நேர்மை காக்கும் ஆணையம் ஒன்று- இஏஐசி- அமைக்கப்பட்டது. இது குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அற்ற ஆணையமாகும்.
ஐபிசிஎம்சி-யை ஏற்படுத்தும் இயக்கத்தைத் தொடங்கும் துணிச்சல் காலிட்டுக்கு உண்டா என லிம் சவால் விடுத்தார். அவர் அதைச் செய்வாரானால் பக்காத்தான் ரக்யாட்டின் 89 நாடாளுமன்ற உறுப்பினர்களும் காலிட்டுடன் ஒத்துழைப்பர் என்றாரவர்.
பதவிக்கு வருபவர்கள் அம்னோவின் சேவர்களாகத் தான் வருகிறார்களே தவிர மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பவர்களாக இல்லை. இதெல்லாம் ஒரு முடிவுக்கு நிச்சயம் வரும் என நம்புகிறேன்!
இவர்களே கொலை செய்வதில் வல்லவர்கள் . இவர்களே கொலையும் செய்வார்கள் .பிறகு எப்படி சட்டம் கடமையை செய்யும் . இந்த புகாரையும் இந்த கொலை காரார்களிடமே கொடுத்தால் எப்படி ?
அவசிய, அவசர தேவை: போலீசில் அதிகார அத்துமீறலையும் ஊழலையும் விசாரிக்க விரிவான அதிகாரத்துடன் ஐபிசிஎம்சி அமைக்கப்பட வேண்டும். இந்த நல்ல, அத்தியாவசிய கருத்துக்கு, போலீஸ் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்க காரணம்????
இந்த வேடிக்கையும் வேதனையும் என்று தீரும்???
தர்மேந்திரனுக்கு நிகந்த இந்த கொடுமைக்கு தாய் கட்சியின் தலைவர் என்று சொல்லி கொள்ளும் பழனிவேல் மௌனம் சாதிப்பது ஏன். தனது பதவியை தற்காக மட்டும் தான் இவர் வாய் திரப்பாரோ ?.
இந்த மாதிரி வழக்குகளை ராணுவம் விசாரித்தால் என்ன ? கேட்டால் சட்டத்தில் இடமில்லை என்று தப்பித்து கொள்வார்கள் .