சிலாங்கூரில் நாட்டின் முதலாவது பெண் சட்டமன்றத் தலைவர் நியமனம்

1 aa excoடிஏபி-இன் ஹன்னா இயோ (சுபாங் ஜெயா), சிலாங்கூர் சட்டமன்றத் தலைவராகி ஒரு வரலாறு படைத்துள்ளார்.

பிகேஆரின் நிக் நஸ்மி நிக் அஹ்மட் (ஸ்ரீசித்தியா) சட்டமன்றத் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிலாங்கூர் அரசு இன்று காலை அதன் ஆட்சிக்குழுவை அறிமுகப்படுத்தியது. மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், அவரது டிவிட்டர் பக்கத்தில் ஆட்சிக்குழுப் பட்டியலை வெளியிட்டிருந்தார்.

அதில் அவரும் 10 ஆட்சிக்குழுவினரும் ஏற்கும் பொறுப்புகளையும் அவர் பதிவிட்டிருந்தார்.

-மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் (கிள்ளான் துறைமுகம், பிகேஆர்): நிதி,  நில மேம்பாடு, இயற்கைவள நிர்வாகம், மாநிலப் பொருளாதார நடவடிக்கை மன்றம், விளம்பரம், மலாய் பாரம்பரிய குழு.

-அஹ்மட் யூனுஸ் ஹைரி (சிகிஞ்சான், பாஸ்): இளைஞர் விளையாட்டுத் துறை, உள்கட்டுமான விவகாரங்கள், பொது வசதிகள்.

-தரோயோ அல்வி (செமந்தா, பிகேஆர்): சுகாதாரம், தொழில்முனைவர் மேம்பாடு, அறிவியல், தொழில் நுட்பம், புத்தாக்கம்.

-இயன் யோங் ஹியான் வா (ஸ்ரீ கெம்பாங்கான், டிஏபி): முதலீடு, தொழில்மயம், வாணிகம், புதுக்கிராம மேம்பாட. சட்டவிரோத தொழிற்சாலைகளைச் சட்டப்பூர்வமாக்கல்.

-ஹலிமா அலி (சிலாட் கிளாங், பாஸ்): கல்வி, உயர்கல்வி, மனித மூலதன மேம்பாடு.

-இஸ்கண்டர் அப்துல் சமட் (செம்பகா, பாஸ்): வீடமைப்பு, கட்டிடங்கள், நகர்புற குடியேற்ற நிர்வாகம்.

-ரோட்சியா இஸ்மாயில் (பத்து தீகா, பிகேஆர்): நலவளர்ச்சி, மகளிர் விவகாரம்.

சாலேஹான் முஹி (சாபாக், பாஸ்): இஸ்லாமிய விவகாரம், விவசாய நவீனமயம், கிராமப்புற மேம்பாடு.

தெங் சாங் கிம் (சுங்கை பினாங், டிஏபி): ஊராட்சி, ஆராய்ச்சி.

-வி.கணபதி ராவ் (கோட்டா ஆலம் ஷா, டிஏபி): தோட்டத் தொழிலாளர்கள், வறுமை, பரிவுள்ள அரசாங்கம்.

– வொங் கியாட் பிங், எலிசபெத் (புக்கிட் லஞ்சான், பிகேஆர்): சுற்றுலா, பயனீட்டாளர் விவகாரம், சுற்றுச்சூழல்.