குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நகரங்களில் மோட்டார்சைக்கிள்-அற்ற பகுதிகளை உருவாக்க போலீஸ் அரசாங்கத்திடம் பரிந்துரைக்கும்.
நேற்று, எஸ்ட்ரோ அவானியில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ள பல்வேறு “கடுமையான” நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்றார்.
“தெருக் குற்றங்களில் 90 விழுக்காடு மோட்டார்சைக்கிளைப் பயன்படுத்தும் குற்றவாளிகளால் செய்யப்படுவதை நாம் அறிவோம்.
“இந் நடவடிக்கை கடுமையானதாக தோன்றலாம்……….ஆனால், மற்ற நாடுகளில் உள்ள பெரிய நகரங்ளில் அதைச் செய்கிறார்கள் என்கிறபோது நம்மால் முடியாதா?
“அது பாதுகாப்பான சமுதாயம் உருவாக உதவும். மோட்டார்சைக்கிள் குற்றவாளிகளின் தொந்திரவின்றி மக்கள் அன்றாட நடவடிக்கைகளைத் தொடரலாம்”, என்றாரவர்.
மோட்டார்சைக்கிள்கள் செல்ல தடை விதிக்கப்படும் அப்பகுதிகள் “பாதுகாப்பான பகுதிகள்” என்றழைக்கப்படும்.
அண்மையில் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸாக நியமிக்கப்பட்ட காலிட் இப்போதைக்கு மூன்று பகுதிகளில் தாம் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். சட்டவிரோத பேரணிகளைக் கட்டுப்படுத்தல், குற்றத் தடுப்பு, போலீஸ் படையின் நேர்மை, நாணயத்தைக் காத்தல் ஆகியவையே அம்மூன்றுமாகும்.
குற்றத்தடுப்புத் துறை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“குற்றங்கள் நிகழுமுன்னர் அவற்றைத் தடுப்பதுதான் நல்லது”, என்றாரவர்.
அத்துறை எல்லாவகை குற்றச் செயல்களை ஒடுக்கும் வியூகங்களை உருவாக்கும்.
அண்ணா அண்ணா தேசிய போலீஸ் படைத் தலைவர் அண்ணா, எனக்கு ஒரு டவுட்டு. அப்படின்னா கார் விபத்துக்களைத் தவிர்க்க கார்கள் அற்ற பகுதிகளை உருவாக்குவீங்கள்ளா அண்ணா…சொல்லுங்கண்ணா சொல்லுங்க…
மக்கள் நலன் கருதி தேசிய போலிஸ் படை தலைவர் காலிட் அபு பக்கார் முடிவு வரவேற்க படும் .குற்றங்கள் நடக்கும் முன் தடுக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு அவர் வழங்கிய இந்த நேர் கானல் சமுதாயதிற்கு நல்ல பயன் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .