கடந்த ஆண்டு டிசம்பர் 15-இல் நடைபெற்ற டிஏபி தேசிய காங்கிரசில் கலந்துகொள்ள தகுதிபெற்ற உறுப்பினர்கள் பலருக்குக் கூட்டம் பற்றித் தகவல் தெரிவிக்கப்படவில்லை. இது சங்கப் பதிவதிகாரி (ஆர்ஓஎஸ்) அலுவலகம் மேற்கொண்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளதாக ஆர்ஓஎஸ் தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மான் கூறினார்.
கூட்டம் பற்றிய அறிவிக்கைகளைப் பெறாத டிஏபி உறுப்பினர்கள் முறையிட்டதை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
“எனவே, அறிவிக்கை பெறாத உறுப்பினர்களுக்கு காங்கிரசில் அவர்கள் விரும்பும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
அந்த காங்கிரஸ் செல்லத்தக்கதா என்பதை முடிவு செய்யுமுன்னர் புகார்தாரர்கள் எழுப்பியுள்ள மற்ற விவகாரங்களையும் ஆர்ஓஎஸ் ஆராயும் என அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
வாக்களிக்கும் தகுதிபெற்ற 753 பேராளர்களுக்கு கூட்டம் நடப்பது பற்றித் தெரிவிக்கப்படவில்லை என்று பல உறுப்பினர்கள் புகார் செய்ததைத் தொடர்ந்து அக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட டிஏபி மத்திய செயலவை (சிஇசி) செல்லத்தக்கதா என்ற சர்ச்சை எழுந்தது.
-பெர்னாமா
இவர்களுக்கே இப்படி என்றால் 2012ல் காலவதியான ம இ காவின் கதி என்ன ?. இந்த நாட்டில் தாய் கட்சிக்கு இப்பொழுது அதிகாரத்துவ தலைவர் யார் கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் சமுதாய தலைவர்களே .உடனே தேர்தல் நடத்த வழிவகுக்காமல் 2014ல் தேர்தல் என்றால் ஆர் ஓ எஸ் சில் எவரும் புகார் கூறினால் கட்சியின் பதிவுக்கு பங்கம் வரதா ?. இவர்களின் பதிவே காலாவதி ஆன இப்பொழுது இந்திய கட்சிகளை இணைக்கும் திட்டம் கேள்வி குறியே ?.