குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மட், கறுப்புப் பட்டியலிடப்பட்ட மலேசியர்களின் கடப்பிதழ்கள் 1959/63 குடிநுழைவுச் சட்டம் பிரிவு 8 அல்லது கடப்பிதழ் சட்டப்படி இரத்துச் செய்யப்படும் என்று தாம் கூறியதாக வந்துள்ள செய்தியை மறுக்கிறார்.
மலேசியாகினியிடம் பேசிய அலியாஸ், மலாய்மொழி நாளேடான பெரித்தா ஹரியான் தாம் கூறியதைத் தப்பாக எடுத்துரைத்து விட்டது என்றார். அது விரைவில் திருத்தம் வெளியிடும்.
“அச்செய்தியில் கூறப்பட்டதில் உண்மையில்லை. அதன் செய்தியாளரிடம் பேசியபோது பாஸ்போர்ட் சட்டங்கள் பற்றி நான் குறிப்பிடவே இல்லை.
“நான் சட்ட வல்லுனர் அல்ல. ஆனாலும் குடிநுழைவு தொடர்பான சட்டங்கள் தெரியும். குடிநுழைவுச் சட்டம் பிரிவு 8 குடிமக்கள்-அல்லாதர் சம்பந்தப்பட்டது என்பதும் தெளிவானதே”, என்றவர் கூறினார்.
ஆனாலும், கறுப்புப்பட்டியலிடப்பட்ட 6564 மலேசியர்களின் கடப்பிதழ்களை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
போலீஸ், வெளியுறவு அமைச்சு ஆகிய தரப்புகளின் அறிவுரைக்கிணங்க அது செய்யப்படும். கடப்பிதழ்களை இரத்துச் செய்யும் அதிகாரத்தைச் சட்டம் அரசாங்கத்துக்கு வழங்குகிறது என்றும் அலியாஸ் கூறினார்.
பெரிதா ஹரியான் உத்துசான் போல ஒரு பொய்யான பத்ரிக்கை என்று
சொன்னால் நம்பலாம்.