சாபாவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருப்போர் பட்டியலில் தம் பெயரும் உள்ளதாகக் கூறுகிறார் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்.
“சாபா குடிநுழைவுத் துறை கறுப்புப் பட்டியலில் என் பெயரும் இருப்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன். சாபா முதலமைச்சர் (மூசா அமான்) உத்தரவின்பேரில் சாபாவுக்குள் நுழைய எனக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது”, என்று லிம் தம் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அப்பட்டியலில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் ஆகியோரும் இடம்பெற்றிருப்பதாக லிம் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாடுக்குள்ளே ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்ல தடையா? முட்டாள்தனமாகவும் சில்லறை தனமாகவும் உள்ளது.
மூசா அமன் புத்திக்கு கிவி பாலிஸ் பன்னாலும் முடியாதுங்க! சபா காரனும் சரவாக் காரனும் இங்கவந்து கொல்லையிடுரானுக்க, கொலபன்னுராணுக, வெறித்தனமா ஆட்டம் போடுறானுங்க, அது பரவாயில்ல ஆனா ஒரு எம் பி சபாவுள்ள நுழைய முடியாது. இவனுங்க சோறு தின்னுரானுங்க்களா வேற எதவும் தின்னுரானுங்க்களா ? மானும் ரோசம் ஈனம் உள்ளவனா இருந்தா அந்த மூசா அமன் நம்ம கோலாலம்பூருக்கு வரக்கூடாது!! வந்து எங்க ஊறு அத தின்னக்கூடாது !!!!