எம்பி அலுவலகத்தில் சைபுடினுக்கு என்ன வேலை?: அஸ்மின் கேள்வி

1azminசிலாங்கூர் பிகேஆர், சிலாங்கூர் மந்திரி புசார் (எம்பி) அலுவலகத்தில் அரசியல் தொடர்பு அதிகாரியாக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் நியமனம் செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

அவ்விவகாரம் மாநிலத்தின் அடிநிலைத் தலைவர்களிடையே “அதிருப்தி” ஏற்படுத்தியிருப்பதாக மலாய்மொழி நாளேடான சினார் ஹரியான், சிலாங்கூர் பிகேஆர் தலைவர் அஸ்மின் அலியை மேற்கோள்காட்டி கூறியுள்ளது.

1azmin nasஅப்பதவிக்கு 13வது பொதுத் தேர்தலில் வென்ற சிலாங்கூர் பிகேஆர் தலைவர்கள் ஒதுக்கப்பட்டு, கெடாவில் போட்டியிட்டுத் தோற்ற சைபுடின் (இடம்) நியமிக்கப்பட்டதுதான் அதற்குக் காரணம் என்றவர் சொல்லியதாகவும் அது அறிவித்துள்ளது.

அவரை அப்பதவிக்கு நியமனம் செய்யும் விவகாரம் சிலாங்கூர் பிகேஆர் தலைமை மன்றத்தில் (எம்பிஎன்) விவாதிக்கப்படவில்லை என கட்சியின் சிலாங்கூர் தகவல் தலைவர் சுஹாய்மி ஷாபி தெரிவித்ததாகவும் அச்செய்தித்தாள் கூறியது.

“இது பற்றி சிலாங்கூர் எம்பிஎன்னுக்கு மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் விளக்கம் அளிக்க வேண்டும். அரசியல்வாதியான சைபுடினை மாநில அரசின் நிர்வாகப் பொறுப்புக்கு எப்படி நியமனம் செய்யலாம் என்று கேள்வி எழுந்துள்ளது”, என்றவர் சொன்னாராம்.

“9வது பிகேஆர் காங்கிரசில் எம்பிஎன் முன்வைத்த பரிந்துரைகள் நிர்வாக பொறுக்கு அரசியல்வாதிகள்-அல்லாதார்தான் நியமிக்கப்பட்ட வேண்டும் என்று கூறி   நிராகரிக்கப்பட்டன” என்றாரவர்.

1azmin info“எம்பி அலுவலகத்திலிருந்து ஊராட்சி மன்றங்கள் வரையிலும் அரசு-சார்ந்த நிறுவனங்களிலும்கூட நிறுவன விவகாரங்களை வலுப்படுத்த” தகுதிவாய்ந்த பக்காத்தான் உறுப்பினர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்று சுஹாய்மி (வலம்)  வலியுறுத்தினார்.

எந்த பக்காத்தான் கொள்கைகளை நம்பி மக்கள் வாக்களித்தார்களோ அக்கொள்கைகளை உடனடியாக அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய அது அவசியம் என்றாரவர்.

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றக் கூட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டது போன்ற “சங்கடமான” நிகழ்வுகள் மீண்டும் நடக்கக்கூடாது என்று குறிப்பிட்ட அவர் அது பற்றி மேலும் விவரிக்கவில்லை. .

இதனிடையே, சினார் ஹரியான் சைபுடினைத் தொடர்புகொண்டு பேசியபோது, அவர் வெள்ளிக்கிழமை காலிட்டைச் சந்திப்பதாகவும் அப்போதுதான் தம் பொறுப்புகள் என்னவென்பது தெரிய வரும் என்றும் சொன்னார்.

 

 

TAGS: