சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தண்டா புத்ரா திரைப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி திரையிடப்படும்.
அந்தத் திரைப்படம் நாடு முழுவதும் திரையிடப்படுவதற்கு தமது அமைச்சும் பினாஸ் என்ற தேசியத் திரைப்படக் கழகமும் அனுமதி வழங்கியுள்ளதாக தொடர்பு, பல்லூடக அமைச்சர் அகமட் சாப்ரி சிக் கூறினார்.
மே 13ஐ மய்யமாகக் கொண்ட அந்தத் திரைப்படம் முன்னாள் பிரதமர் அப்துல் ரசாக் ஹுசேனுக்கும் துணைப் பிரதமர் டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மானுக்கும் இடையிலான உறவுகளைச் சித்தரிக்கிறது.
அந்தத் திரைப்படத்துக்கு PG13 மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது.
தண்டா புத்ரா ‘தேசிய கருப்பொருளை’ கொண்ட திரைப்படம் என்றும் சாப்ரி சொன்னார்.
என்றாலும் அந்தத் திரைப்படம் ‘கூடிய விரைவில்’ திரையிடப்படுவதைக் காணத் தாம் தனிப்பட்ட முறையில் விரும்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.