அம்னோ தலைமைப் பதவிகளுக்குப் போட்டி கூடாது: புவாட்

1 umnoஅம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகம்மட் புவாட் ஸர்காஷி,  ஆண்டு இறுதியில் நடைபெறும் அம்னோ கட்சித் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டி இருக்கக்கூடாது  என்று முன்மொழிந்துள்ளார்.

கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் துணைப் பிரதமர் முகைதின் யாசினுக்குமிடையில் நல்ல ஒத்துழைப்பு நிலவுவதாகவும் அவர்களால் கட்சிக்கு எந்தவொரு பிரச்னையுமில்லை என்றும் அவர் கூறியதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.

1 umno 1கடந்த பொதுத் தேர்தலில் பத்து பகாட்டில் போட்டியிட்ட தோற்ற முன்னாள் கல்வி துணை அமைச்சரான புவாட்,  நஜிப்-முகைதின் தலைமையில் அம்னோ முன்னிலும் வலுவான கட்சியாக உருவாகியுள்ளதால் நாட்டின் உருமாற்றத் திட்டங்களில் அதனால் கவனம் செலுத்த முடிகிறது என்றார்.

“13வது பொதுத் தேர்தலில் அம்னோ அதன் நாடாளுமன்ற இடங்களை 79-இலிருந்து 88ஆக உயர்த்திக்கொண்டது. மலாய் வாக்குகள்  அம்னோ, பிகேஆர், பாஸ் என மூன்று  பகுதிகளாக பிளவுபட்டாலும் பெரும்பாலான வாக்காளர்கள் அம்னோவையே ஆதரித்தனர்” என்றாரவர்.

நஜிப்-முகைதின் தலைமைத்துவம் அப்படியே தொடர வேண்டும்.

எனவே, அப்பதவிகளுக்கு வேறு எவரும் போட்டியிடக்கூடாது என்றவர் விரும்புகிறார்.