‘அரசாங்கம் செய்தி இணையத் தளங்களை கட்டுப்படுத்தும் சாத்தியத்தை ஆராயும்’

ahamdசிங்கப்பூரில் உள்ள செய்தி இணையத் தளங்களைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் முடிவு  செய்ததைத் தொடர்ந்து இங்குள்ள செய்தி இணையத் தளங்களைக் கட்டுப்படுத்தும் சாத்தியத்தை தான்  ஆய்வு செய்வதை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள செய்தி இணையத் தளங்களுடைய வாசகர் எண்ணிக்கை மாதம் ஒன்றுக்கு 50,000  -த்தை தாண்டுமானால் ஊடக மேம்பாட்டு வாரியத்திடமிருந்து செய்தி இணையத் தளங்கள் அனுமதி  பெற வேண்டும் என்பதை சிங்கப்பூர் அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

“நாங்கள் அந்த சாத்தியத்தை ஆய்வு செய்கிறோம். ஆனால் அது நமது கோட்பாடுகளுக்கு எதிரானதாக
இல்லை என்பதை நாம் முதலில் பார்க்க வேண்டும். இப்போது சமூக ஊடகங்கள் முக்கிய ஊடக
நீரோடைகளாக மாறி விட்டன,” என தொடர்பு, பல்லூடக அமைச்சர் அகமட் சாப்ரி சிக் இன்று
கூறினார்.

“மிகவும் நவீனமானது என மக்கள் கருதும் சிங்கப்பூர் இப்போது கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால்
நாமும் அந்த சாத்தியத்தை ஆராய வேண்டும்,” என்றார் அவர்.

“அது பெரும்பாலும் The Straits Times, Berita Harian (சிங்கப்பூர் பதிப்பு) ஆகியவற்றை மட்டுமே
பாதிக்கும். அது வலைப்பதிவுகளையும் மற்றவற்றையும் தொடாது,” என்றார் அவர்.ahmad1

உலு கிளாங்கில் உள்ள பினாஸ் என்ற மலேசிய தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துக்கு வருகை  அளித்த பின்னர் அகமட் சாப்ரி நிருபர்களைச் சந்தித்தார்.

அனைத்துலகத் திரைப்படத் தயாரிப்புக்களுக்கு இணையான தரத்தை மலேசியாவும் பெற முடியும்  என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“நமது ஆற்றலை வலுப்படுத்துவது அதில் சம்பந்தப்பட்டுள்ளது. ஏனெனில் நம்மிடம் ஏற்கனவே
வளங்களும் சரியான வசதிகளும் உள்ளன. அண்மைய எதிர்காலத்தில் அதனை ஆய்வு செய்யுமாறு
நான் பினாஸைக் கேட்டுக் கொள்வேன்,” என அவர் குறிப்பிட்டார்.