‘இனவாத’ கருத்துக்கள் : இடைநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் இடமாற்றம்

studentsஜோகூர் கேலாங் பாத்தாவில் இடைநிலைப் பள்ளிக்கூட ஆசிரியை ஒருவர் இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்ததாக கூறப்படுவதின் தொடர்பில் அவர் தற்காலிகமாக ஜோகூர் பாரு மாவட்ட கல்வித்  துறைக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும் எனக் கல்வி அமைச்சு ஆணையிட்டுள்ளது.

மாணவர் ஒருவருடைய தாயார் தெரிவித்த புகார் மீதான போலீஸ் விசாரணை முடியும் வரையில் எடுக்கப்படும் தொடக்க நடவடிக்கை அது என்று கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் அப்துல் கபார்  மாஹ்முட் கூறினார்.

உள் விசாரணை அறிக்கை அமைச்சுக்குக் கிடைத்துள்ளதாகவும் ஆனால் இறுதி முடிவு இன்னும் ஆய்வு
செய்யப்படுவதாகவும் அவர் சொன்னார்.

“மாணவர் ஒருவருடைய குடும்பத்தினர் சமர்பித்த புகார் மீது போலீசார் இன்னும் விசாரிக்கின்றனர்,”
என அவர் சொன்னதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஆசிரியை இனவாது என்றும் அரசாங்கத்தை வெறுக்குமாறு மாணவர்களைத் தூண்டினார் என்றும்
தெரிவிக்கப்பட்ட பின்னர் மாணவருடைய தாயார் கடந்த வாரம் அந்தப் புகாரை சமர்பித்தார் என்றும்
அந்த நாளேடு செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தையும் மலாய் மாணவர்களையும் வருணிப்பதற்கு சீனரான அந்த ஆசிரியை தவறான
இனவாத சொற்களைப் பயன்படுத்தியதாக மாணவருடைய தாயார் கூறிக் கொண்டார்.