இண்ட்ராப் நிறுவனர் பி.உதயகுமார், இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர்மீது சுமத்தப்பட்ட தேச நிந்தனை குற்றச்சாட்டுக்கு எதிராக எதிர்வாதம் செய்ய மறுத்தார்.
2007 நவம்பர் 15-க்கும் டிசம்பர் 8-க்குமிடையில் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு எழுதிய கடிதத்தில் அவர், மலேசியாவில் அரசாங்க ஏற்பாட்டில் ஏழை இந்தியர்களை சமூக ரீதியில் ‘இன ஒழிப்பு’ செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார் எனக் கூறப்பட்டது. அக்கடிதம் Police Watch வலைத்தளத்திலும் பதிவிடப்பட்டிருந்தது.
நீதிபதி அஹ்மட் ஸம்ஸானி முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டபோது தம் தரப்பை எடுத்துரைக்க இரண்டு தடவை அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், அவர் எதிர்வாதம் செய்ய மறுத்தார்.
வழக்கின் சந்தர்ப்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் மலேசியாவில் நிறுவன மயமாக செயல்படும் இந்திய ஏழைகளைப் பலிவாங்கும் அரசாங்கத்தின் இனவாதக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் தாம் எதிர்வாதத்தில் ஈடுபடப் போவதில்லை என்று உதயகுமார் கூறினார்.
இவ்வழக்கில் நீதிமன்றம் இன்று பிற்பகல் 2.30க்கு அதன் தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாழ்க உதயகுமார் … உண்மையான வீரன் .
துற்றுவார் துற்றடும், உங்கள் சமுதாய அர்பணிப்புக்கு நன்றி.
உங்கள் பனி தொடர என்னுடைய வாழ்த்துக்கள் திரு. உதயகுமார்.
“அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே” ஒருதாய் பிள்ளைகள், ஒருவழியில் சென்றபோது ஒன்றாக இருந்தார்கள்! ஒன்றாக போராட்டம் செய்தார்கள் ஆனால் இருவழி என்றானதும் ஒருவர் “அரச மரியாதையுடன் பதவி” ஏற்கிறார் மற்றவர் கைவிலங்குடன் “சிறை செல்கிறார்” யாரை குற்றம் சொல்வது? பொது நலமோ …. சுயநலமோ … பதிப்பு நமக்குதானே ? உதயகுமாருக்கும் ஒரு காலம் வரும் , அப்போது வேதா ?????
மலேசியாவின் இந்தியர்களின் நன்மைக்காக
குரல் கொடுத்த வீரத் தமிழன் உதயா உங்களை வணங்குகிறோம் , மதிக்கிறோம் .கொஞ்சம் பிடிவாதத்தை குறைத்திருந்தால் தளர்த்திருந்தால் நீங்கள் பக்காதான் கட்சியில் முடி சூடா இந்திய தலைவருள் ஒருவராக வலம் வந்திருக்கலாம் . இந்த சமுதாயத்திற்கு நீங்கள் செய்ய நினைத்ததை செய்திருக்காலம். என்ன செய்வது காலத்தின் கோலாமா இது . நாடகம் ஆடிய ஒருவர் இன்று பதவியில் ..நல்லது செய்ய நினைத்தவர் இன்று சிறையில்..வேதனையாய் இருக்கிறது .