தடுப்புக் காவலில் இருந்த என். தர்மேந்திரனைக் கொன்றதாக மூன்று போலீஸ் அதிகாரிகள்மீது இன்று கோலாலும்பூர் மெஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட ஜப்ரி ஜாப்பார்,44, முகம்மட் நஹார் அப்துல் ரஹ்மான்,45, முகம்மட் ஹஸ்வாதி ஜம்ரி ஷாரி, 32, ஆகிய மூவரும் குற்றச்சாட்டை எதிர்த்து வாதிடவில்லை.
ஜப்ரி, நஹார், ஹஸ்வாதி ஆகிய மூவருடன் இன்னும் பிடிபடாமல் இருக்கும் மேலும் ஒருவர்மீதும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின்கீழ் தர்மேந்திரனைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இச்சட்டம், குற்றம் சாட்டப்பட்டோர் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்க வகை செய்கிறது. இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.
31-வயது தர்மேந்திரன் கோலாலும்பூர் போலீஸ் தலைமையகத்தின் லாக்-அப்பில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். துப்பாக்கி ஏந்தி கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின்பேரில் தர்மேந்திரன் மே 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டு மே 12-இலிருந்து விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தடுப்புக் காவலில் இருந்தபோது அவர் இறந்தார்.
கொலைக் குற்றம் சுமத்தக் கூடிய தப்பு தாளங்களைச் செய்தவர்களை சேவையில் இருந்து இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டால் போலீஸ்காரர்கள் பணியில் சோகம் தோன்றிடும் என்று கூறிய அறிவிலி மந்திரிக் குமாரன் எங்கே போய் ஒளிந்துக் கொண்டார்?
அவசரப் பட வழியில்லை. விசாரணை எந்தக் கோணத்தில் செல்லுகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
துப்பாக்கியா… அது எங்கிருந்து வந்தது…….
தர்மம் வென்றது குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கெடைக்க ஆண்டவனை வேண்டுங்கள் ,
குற்றவாளிகளின் முகங்களை இனிமேல் கடைசிவரை முக மூடிகளுடன்தான் நாம் பார்க்க முடியும்.(அல்தன்துயா) கேஸ் போல்.
கொலையாளிகளின் முகங்களை முகமூடி அணிந்துதான் அழைத்துச் செல்ல வேண்டுமா? இதில் ஏதாவது தில்லுமுல்லு கள் உண்டோ?!!!!