சுகாதார அமைச்சு: அழியா மை மீது பாதுகாப்பு அறிக்கை ஏதும் கொடுக்கப்படவில்லை

inkஅழியா அமை மீது பாதுகாப்பு அறிக்கை எதனையும் சுகாதார அமைச்சு வழங்கவில்லை என்றும்  அத்தகைய அறிக்கையை வழங்குமாறு இசி என்ற தேர்தல் ஆணையம் கேட்டுக் கொள்ளவில்லை  என்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் கூறுகிறார்.

புற்று நோய் அபாயத்தைக் குறைப்பதற்காக அந்த மையில் உள்ள முக்கியக் கலவையான சில்வர்  நைட்டிரேட்டை ஒரு விழுக்காட்டுக்கு நீர்மைப்படுத்த வேண்டியிருந்தது எனச் சொல்வது உண்மையா  எனக் கேட்கப்பட்ட போது அவர் அவ்வாறு பதில் அளித்தார்.

“அது எனக்கு நிச்சயமாகத் தெரியாது (புற்று நோய் அபாயம் உள்ளதா) நீங்கள் அது குறித்து இசி-யிடம்
வினவ வேண்டும். அது அந்த விஷயம் மீது எங்களிடம் அறிக்கை ஏதும் கேட்டதா என்று நீங்கள்
கேட்டால், நான் அவ்வாறு நினைக்கவில்லை,” என அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.ink1

“எந்தப் பிரதிநிதித்துவத்தையும்” வழங்குமாறு அமைச்சை இசி கேட்டுக் கொண்டதா என சுப்ரமணியம்  பின்னர் அங்கிருந்த சுகாதார அமைச்சு அதிகாரி ஒருவரிடம் வினவினார். அவர் இல்லை எனப் பதில்  அளித்தார்.

“இசி எங்களைக் கேட்டுக் கொண்டு நாங்கள் அறிக்கை கொடுத்திருந்தால் அது வேறு விஷயம். ஆனால்  எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. நாங்கள் அதனை சோதனை (check)செய்வோம்,” என அவர்  தொடர்ந்து சொன்னார்.

ink2சில்வர் நைட்டிரேட் அதனைப் பயன்படுத்துகின்றவர்களுடைய ஆரோக்கியத்துக்கு பாதிப்பை  ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சு தெரிவித்த பின்னர் அழியா மையில் அந்த ரசாயனக் கலவையை  கூடுதலாக சேர்க்க முடியாமல் போய் விட்டது என மே 12ம் தேதி சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸுக்கு  அளித்த பேட்டியில் இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறியிருந்தார்.

“அந்த மையில் ஒரு விழுக்காட்டுக்கு மேல் சில்வர் நைட்டிரேட்டை சேர்த்தால் அது சிறுநீரகத்தை சேதப்படுத்துவதுடன் புற்றுநோயையும் ஏற்படுத்தும் என எங்களுக்குத் தெரிவிக்கும் கடிதம் ஒன்று  சுகாதார அமைச்சிடமிருந்து எங்களுக்கு வந்தது,” என அஜிஸ் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டார்.

 

TAGS: