புகழ்பெற்ற பிஎன் ஆதரவு வலைப்பதிவாளரான பாப்பாகோமோ இந்த வாரத்திலிருந்து ஒய்வு பெற்றுள்ளார். அந்தத் தகவலை சினார் ஹரியான் இன்று வெளியிட்டது.
தாம் ஒய்வு பெறுவதை அறிவித்த பாப்பாகோமோ,” என் வேலை முடிந்து விட்டது. பாப்பாகோமோ
என்ற வலைப்பதிவின் பெயரில் நடத்தப்பட்ட போராட்டம் பற்றி கோமோ சொல்வது இது தான். புதிய
வலைப்பதிவாளர்கள் உலகை அசைக்கட்டும்,” என பாப்பாகோமோ சொன்னதாக அவருடைய டிவிட்டர்
பக்கத்தை (@PapaGomo) மேற்கோள் காட்டி அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
நல்ல போராட்டத்தை தொடருவதற்கு மேலும் பல திறமையான பிஎன் ஆதரவு வலைப்பதிவாளர்கள் வருவார்கள் என்றும் அந்த வலைப்பதிவாளர் நம்பிக்கை தெரிவித்தார்.
“கோமோ என்னுடைய துணி வியாபாரம் மீது கவனம் செலுத்த விரும்புகிறார். அத்துடன் நோன்பு மாதமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் கூடுதல் வருமானத்தைத் தேட வேண்டியுள்ளது,” என அவர் டிவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ் என்ற இயற்பெயரைக் கொண்டவர் எனக் கூறப்படும் பாப்பாகோமோ பிரபலமான எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் குறித்து சர்ச்சைக்குரிய காணொளிகளை இணையத்தில் சேர்த்ததின் மூலம் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றார்.
தாம் இணையத்தில் சேர்த்த தகவல்களுக்காக எதிர்த்தரப்புத் தலைவர் தொடுத்துள்ள 100 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை பாப்பாகோமோ இப்போது எதிர்நோக்கியுள்ளார். அந்த வழக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாப்பாகோமோ என்ற வலைப்பதிவாளர் தாம் அல்ல என வான் முகமட் மறுத்துள்ளதால் அந்த வலைப்பதிவாளர் குறித்து மர்மம் நீடித்த போதிலும் பாப்பாகோமோ வலைப்பதிவின் உரிமையாளரும் அதனை நடத்துகின்றவரும் வான் முகமட் என்று அன்வார் அவரது பெயரை தமது
வழக்கில் பெயர் குறிப்பிட்டுள்ளார்.
அன்வார் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பல காணொளிகள் தம்மிடம் இருப்பதாகவும் அவற்றை
வெளியிடப் போவதாகவும் ஏற்கனவே எச்சரித்துள்ள பாப்பாகோமோ அன்வார் காணப்படுவதாக தாம்
கூறிக் கொண்ட பல படங்களையும் குறுகிய காணொளிகளையும் வெளியிட்டுள்ளார்.
ஆனால் அவர் ‘ஒய்வு பெறுவது’ உண்மை என்றால் அது ரத்துச் செய்யப்படலாம் அல்லது தள்ளி
வைக்கப்படலாம்.
இவன் கோமாவில் போனாலும் அம்னோ தட்டி எழுப்பிவிடும் !
உப்பைத் தின்னவன் தண்ணீர் குடிக்கும் நேரம் வந்துவிட்டதா? உன்னை திவால் ஆக்காமல் விடமாட்டார் அன்வார்!.