லிம் கிட் சியாங் தடை ஏதுமின்றி சபாவுக்குள் நுழைந்தார்

kit siangடிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங், இன்று சபாவுக்குள் எந்தத் தடையுமின்றி  நுழைந்தார். அவருக்கும் பலருக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

“எதிர்பார்க்கப்பட்ட எந்தத் தடையும் இல்லாமால் நான் சபாவுக்குள் நுழைந்தேன். சபாவுக்கு  வழங்கப்பட்டுள்ள குடிநுழைவு  உரிமையில் சட்டப்பூர்வ அரசியல் நடவடிக்கைகளுக்காக  மலேசியர்கள் அந்த மாநிலத்துக்குள் நுழைவதற்கான அனுமதியும் உள்ளிட்டிருக்க வேண்டும்,” என அவர் இன்று காலை மணி 10.35க்கு டிவிட்டரில் செய்தி அனுப்பினார்.

கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையம் சென்றடைந்ததும் லிம் அந்தச் செய்தியை
அனுப்பியிருக்க வேண்டும்.

சபாவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளவர்களின் முழுப் பட்டியலை வெளியிடுமாறு அவர் சபா முதலமைச்சர் மூசா அமானைக் கேட்டுக் கொண்டார். “சட்டவிரோத அரசியல் நடவடிக்கைகளுக்காக’ அங்கு நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளவர்களை அந்தப் பட்டியலிலிருந்து நீக்குமாறு அவர் வலியுறுத்தினார்.kit siang1

“பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வாரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொள்ளப்பட  வேண்டும்,” என அவர் சொன்னார். மே 30ம் தேதி கோத்தா கினாபாலு விமான நிலையத்தில் நுருல்  இஸ்ஸா தடுத்து வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தையே லிம் அவ்வாறு குறிப்பிட்டார்.

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டதாக கூறப்படும்  கடிதம் ஒன்றை சபா மாநில டிஏபி பிரச்சாரக் குழுத் தலைவர் சான் பூங் ஹின் வெளியிட்டார்.

அந்தக் கடிதத்தில் கையெழுத்து இல்லாததால் அதன் சட்டப்பூர்வத்தன்மையை உறுதி செய்யுமாறு அவர் முதலமச்சரைக் கேட்டுக் கொண்டார்.

நுருல் இஸ்ஸாம் லிம் ஆகியோருடன் மேலும் பலரும் சபாவுக்குள் நுழைவதற்குத் தடை
விதிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதம் தெரிவித்தது.

இப்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த மாநிலத் தலைமைப் போலீஸ் அதிகாரி
ஹம்சா தாயிப், தடுக்கப்பட்ட ஒரே நபர் நுருல் இஸ்ஸா மட்டுமே என்று தெரிவித்தார்.

TAGS: