‘துரோகிகளை’ விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என வழக்குரைஞரும் அரசியல்வாதியுமான சுல்கிப்லி நூர்டின் கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் அரசாங்கத்தைப் பிரதிநிதிப்பதால் சுய நலன் சம்பந்தப்படுவதைத் தவிர்க்க அது உதவும் என அவர் கருதுகிறார்.
அதே வேளையில் அரசர் அமைப்பு முறையின் சார்பில் வழக்குத் தொடரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு நியமிக்கப்பட வேண்டும்.”
“மாமன்னர் சார்பில் வழக்குத் தொடரும் நடவடிக்கைகளைச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்
மேற்கொள்வது பொருத்தமாக இருக்காது,” என அவர் பெர்னாமா தொடர்பு கொண்ட போது கூறினார்.
மாமன்னருக்கு துரோகம் செய்யும் குற்றம் தொடர்பில் சிறப்புச் சட்டத்தை அரசாங்கம் தயாரிக்க
வேண்டும் என முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகமட் நூர் அப்துல்லா கேட்டுக்
கொண்டுள்ளது பற்றி சுல்கிப்லி கருத்துரைத்தார்.
விசுவாசம் காட்டாத நிலை மீதான சட்டத்துக்கு பொருத்தமாக மலேசிய சட்ட முறை திருத்தப்பட வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் சொன்னார்.
“வழக்குத் தொடரும் நடவடிக்கைகளை சட்டத் துறையில் தேர்ச்சி பெற்ற ஒருவர் மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. இப்போது சில சமயங்களில் வழக்குத் தொடரும் நடவடிக்கைகளை போலீஸ் அதிகாரியே மேற்கொள்கிறார். அந்த நிலை பலவீனங்களைக் கொண்டுள்ளது,” என்றார் சுல்கிப்லி.
துரோகிகளாக இருக்கும் குற்றத்தைப் புரிந்தவர்களை விசாரிக்க சிறப்பு சட்ட விதிகள் இப்போது ஏதுமில்லை என அவர் மேலும் சொன்னார்.
மாமன்னருடைய அதிகாரத்தை மதியுங்கள்
தற்போது துரோகிகள் எனக் கருதப்படுகின்றவர்கள் மீது 1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டம்
அல்லது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுகின்றது என்றார் அவர்.
“துரோகம் செய்துள்ள குற்றம் மீது தெளிவான விளக்கம் நடப்பில் உள்ள சட்டத்தில் இல்லை என்பதே பிரச்னை ஆகும்.”
விசுவாசம் காட்டதவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட
வேண்டும் என்றும் சுல்கிப்லி யோசனை கூறினார்.
அதற்கான தண்டனையும் கடுமையாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், அப்போது தான்
மக்கள் மாமன்னருடைய அதிகாரத்தின் முக்கியத்துவத்தை உணருவர் என்றார்.
மலேசிய மாமன்னருடைய கடமைகள், அதிகாரம் குறித்து பொது மக்கள் புரிந்து கொள்ளத் தவறியதைத் தொடர்ந்து தேசிய அரசர் அமைப்பை அவமதிக்கும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் சிறப்புச் சட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என யோசனை கூறப்பட்டுள்ளது.
-பெர்னாமா
ஆமாம் சூல் கிப்ளி நீ சொல்வது சரிதான்! உன்னைப்போன்ற இனவாத துரோகிகளையும் விசாரிக்க சிறப்பு நீதி மன்றம் தேவைதான்.
உன்னை விசாரிக்க ஒரு நீதிமன்றம் அமைக்கலாமா?
சிறப்பு நீதி மன்றம் முதலில் ஜூல்கிப்லி நோர்டின்னை விசாரிக்க வேண்டும் ! 2008 டில் இவனுக்கு வாக்கு அளித்த மக்களை ஏமாற்றி கட்சி தாவி ,மலாய்காரர் அல்லாதவரின் உரிமையை கேவலமாக பேசிய , இந்து தெய்வத்தை இழிவு படுத்திய ,13 வது பொது தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகும் சிக்கலான அறிக்கை விடும் இந்த பன்னாடையை விசாரிக்கவேண்டும் !
இந்த இன வெறியனை விசாரிக்க ஒரு சிறப்பு நீதி மன்றம் அவசியம் தான். இவன் ஒரு மஹா மாங்கா மடையன். இவனை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை .
உனக்கு எந்த சட்டத்தை பயன் படுத்துவது ??? நீங்கள் செய்வதை எல்லாம் செய்து விட்டு மன்னிப்பு கேட்டு விட்டால் சரியாகிவிடும் … ஆனால் மற்றவர்கள் அதே தவறை செய்து விட்டால் சட்டத்தை பற்றி கிழிபீர்கள்