பக்கத்தான் கூட்டணியில் இணைந்து கொள்வதற்காக மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) செய்திருந்த மனுவுக்கு பகத்தான் தலைமைத்துவம் எழுத்து மூலம் பதில் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
பக்கத்தான் தலைவர்கள் ஆளுக்கொருவிதமாக எதிர்மாரான அறிக்கைகள் விடுத்துக் கொண்டிருப்பதால் அதிகாரப்பூர்வமான பதில் எழுத்து மூலமாக வேண்டும் என்று டிஎபி தேசியத் தலைவர் கர்பால் சிங் இவ்விண்ணப்பம் குறித்து வெளியிட்டிருந்த அறிக்கை மீது கருத்துரைத்த பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செல்வம் கூறினார்.
“பிஎஸ்எம் மனு செய்து நீண்டகாலமாகிறது. அம்மனு மீதான நிலை குறித்து பக்கத்தான் எழுத்து மூலமாக எதிர்வினையளிக்கும் என்று நம்புகிறோம்.
“நாங்கள் அவர்களின் முரண்பாடான முடிவுகள் குறித்து குழப்பமடைந்துள்ளோம்…இதனால் மக்கள் குழப்பமடையாமல் இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்”, என்று அருட்செல்வம் கூறியதாக சினார் ஹரியான் ஓன்லைன் கூறுகிறது.
அதிகாரப்பூர்வமான பதில் அளிக்கப்பட்டால், அதனை பிஎஸ்எம் உறுப்பினர்கள் அவர்களின் எதிர்வரும் கட்சி காங்கிரஸ்சில் விவாதிக்க இயலும் என்றாரவர்.
“தற்போதைக்கு, பக்கத்தானில் இணைவது எங்களது முடிவாகும். அதிகாரப்பூர்வமான கடிதம் கிடைத்து விட்டால், அவ்விவகாரம் குறித்து நாங்கள் மீண்டும் விவாதிப்போம்”, என்று அவர் மேலும் கூறினார்.
கொட்டிய கொளப்பி கிட்ட இருக்கானுங்க ,பேசாம bn ஒட்டு போட்ட இந்த பிரச்சினை இருக்காது
பி.எஸ் .எம். கட்சியை PR நம்பவில்லை போலும். அக்ட்சியின் தலைவர்கள் தங்களது தோற்றத்தை ( உடையில்) மாற்றிக் கொள்ள வேண்டும். போரட்ட வாதி என்பதினால் திரு அருட்ஸ் செல்வன் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றாலும் தனது தோற்றத்தை ( உடையில் ) சட்ட மன்றத்திற்கு செல்லும்போதும் கூட மாற்றமாட்டார் போலும்.
எழுத்து மூலம் பதில் அளிக்க வேண்டும் என்று கோருவதே கேவலம். தேர்தலில் போட்டி வேட்பாளர் நிறுத்தப்பட்டு தோல்வி தழுவியும் உங்கள் கட்சிக்கு ரோசம் வரவில்லை என்றால் உங்கள் தன்மானத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதைவிட மோசம் உங்கள் கட்சி பவானி பக்காத்துடன் சேர்ந்து பவனி வருவது. தமிழன் என்றால் தன்மானம் இழந்தவன் என்று பொருளா?
தேர்தல் முடிந்து விட்டது பி எஸ் எம் கதி அவளவு தான். அன்வருக்கு உங்கள் உதவி தேவை இல்லை