பால் லோ: ஐபிசிஎம்சி, இஎஐசி எல்லாம் வெறும் பெயர்கள்தான்!

Paul low keng Swanபிரதமர்துறையில் “அமைச்சர்” என்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பால் லோ “வலுப்படுத்தப்பட்ட” இஎஐசி, ஐபிசிஎம்சியைவிட சிறப்பானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

“புதுப்பிக்கப்பட்டு” மற்றும் “வலுப்படுத்தப்பட்ட” நேர்மை ஆணையம் அமலாக்கப் பணித்துறை (இஎஐசி), சுயேட்சை போலீஸ் புகார் மற்றும் தவறான நடத்தை ஆணையம் (ஐபிசிஎம்சி) போன்ற புதிய ஆணையத்தைத் தொடங்குவதைவிடச் சிறந்தத்  தேர்வாக இருக்கும் என்று பால் லோ தெரிவித்தார்.

ஒரு வலுவான இஎஐசி போலீஸ் படையுடன் இதர 18 பணித்துறைகளை கட்டுப்படுத்த இயலும் என்பதோடு புதிய ஐபிசிஎம்சி போல் அதிக நேரம் தேவைப்படாமல் அது விரைந்து செயல்பட முடியும் என்றாரவர்.

இவ்விவகாரம் குறித்து பால் லோ சமீபத்தில் மஇகா, இதர பல அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் அமைச்சரவையுடன் நடத்திய விவாதங்கள் சம்பந்தப்பட்ட அறிக்கை ஒன்றில் “ஐபிசிஎம்சி, இஎஐசி எல்லாம் வெறும் பெயர்கள்தான்” என்று கூறியுள்ளார்.

“தற்போது இருக்கும் இஎஐசியின் பலவீனங்கள் கிட்டத்தட்ட அடையாளம் காணப்பட்டுள்ளது. (ஆகவே) நமக்கு  உண்மையிலேயே அவசியமானது பணியைச் சிறப்பாகச் செய்வதற்கு வேண்டிய வளம், அதிகாரம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றை கொண்ட ஒரு சுயேட்சையான பணித்துறை.”

ஜூன் 4 ஆம் தேதி அவர் அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து, நடைமுறைக்குரிய காரணங்களுக்காக  இஎஐசிக்கு அதிகாரமளித்தல் சிறந்த தேர்வாகும் என்று அமைச்சரவை முடிவெடுத்தது என்று லோ மேலும் கூறினார்.