இப்போது நாஸிர் அப்துல் ரசாக் ‘மலாய் எதிர்ப்பாளர்’

cinaஏர் ஏசியா எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ரான் ஒஸ்மான் ரானிக்கு  ஆதரவாகப் பேசிய பிரதமரது சகோதரர் நாஸி அப்துல் ரசாக் ‘மலாய்  எதிர்ப்பாளர்’ என மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்கத்தின் தலைமையில்  இயங்கும் மலாய் முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்கள் கூட்டணி ஒன்று  வருணித்துள்ளது.

உத்துசான் மலேசியா ‘Apa lagi Cina mahu’ (சீனர்களுக்கு வேறு என்ன வேண்டும்)  என்னும் தலைப்பில் வெளியிட்ட ‘இனவாத’ செய்தியை குறை கூறிய அஸ்ரானை  ‘தலைவருக்கு உள்ள அடையாளத்தை’ கொண்டுள்ளார் என சிஐஎம்பி குழும  தலைமை நிர்வாக அதிகாரியுமான நாஸிர் நேற்று பாராட்டியிருந்தார்.cina1

ஆனால் அது Gabungan NGO Melayu-Islam என்ற அந்த கூட்டமைப்புக்கு  மகிழ்ச்சியை அளிக்கவில்லை.

“நாங்கள் நாஸிருடைய அறிக்கை குறித்து மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.  ஆசியானில் புகழ் பெற்ற கூட்டு நிறுவனம் ஒன்றுக்கு அவர் தலைமை தாங்கிய  போதிலும் அவர் தமது சொந்த மலாய் இனத்தின் உணர்வுகளை ஒரங்கட்டும்  சிந்தனைக்குள் சிக்கிக் கொண்டுள்ளார்,” என அது இன்று விடுத்த அறிக்கை  தெரிவித்தது.

அஸ்ரான் உத்துசானைக் குறை கூறியதைத் தொடர்ந்து அந்த ஏடு ஒரு வாரத்துக்கு  அவரை எதிர்க்கும் செய்திகளை வெளியிட்டது. ஏர் ஏசியாவை புறக்கணிக்குமாறு  அம்னோ மூத்த உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளும் செய்திகளும் அவற்றுள்  அடங்கும்.

cina2நாஸிரையும் அஸ்ரானையும் போன்று எல்லா மலாய்க்காரர்களும் சலுகை  பெற்றவர்கள் அல்ல என்றும் அந்த கூட்டமைப்பு தெரிவித்தது. அவர்கள்  இருவரும் தங்கள் வேர்களை மறந்து விட்டதாகவும் அது குற்றம் சாட்டியது.

“அரண்மனையில் வாழும் நாஸிர், உயிர் வாழ்வதற்கு மட்டும் போதுமான  வருமானத்துடன் சிரமமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் மலாய்க்காரர்கள்  அனுபவிக்கும் சிரமங்களை உணர முடியாது.”

“நாஸிரும் அஸ்ரானும் தங்களது வேர்கள் எங்கு உள்ளன என்பதை புரிந்து  கொள்ள வேண்டும். தங்களது செல்வம், பதவி, சொத்து காரணமாக அவர்கள்  ஆணவத்துடன் நடந்து கொள்ளக் கூடாது.”

அவர்கள் இருவருடைய வெற்றிக்கு அவர்களுடைய மலாய் மூதாதையர்கள்  நடத்திய போராட்டங்கள் காரணமாகும். அவர்கள் தங்கள் இன வம்சாவளியைச்  சார்ந்த மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது என்றும்  அந்த கூட்டமைப்பு வலியுறுத்தியது.

மே 5ல் நடந்த 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட்டுக்கு ஆதரவு  அளித்ததாக கூறப்படும் வர்த்தகங்களைப் புறக்கணிக்குமாறும் அந்த அமைப்பு  கேட்டுக் கொண்டது.