‘மதம் மாற்ற சம்பவம் அமைச்சரவை முடிவுகள் வலு இல்லாதவை என்பதைக் காட்டுகின்றது

convertபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ரகசியமாக மதம் மாற்றம் செய்வதை தடை  செய்யும் அமைச்சரவை முடிவை அரசு ஊழியர்கள் மீறுவதால் அமைச்சரவை  வலிமை இல்லாதவை என சமயங்களுக்கு இடையிலான மன்றம் குறை  கூறியுள்ளது.

“2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சரவை செய்த அந்த முடிவு அத்தகைய  சம்பவங்கள் அநீதியாக இருப்பதால் முஸ்லிம் அல்லாத மலேசியர்களைச்  சாந்தப்படுத்தும் பொருட்டு எடுக்கப்பட்டதா ?”

“அமைச்சரவை முடிவுக்கு வலிமை ஏதும் உள்ளதா அல்லது அரசு ஊழியர்கள்  தங்கள் விருப்பம் போல செயல்பட முடியுமா ?”

“பிரதமரும் அவரது அமைச்சரவையும் வழங்கும் உத்தரவுகளையும் அரசு  ஊழியர்கள் அவ்வாறு செய்ய இயலுமா ?” என மலேசிய பௌத்த, கிறிஸ்துவ,  இந்து, சீக்கிய, தாவே ஆலோசனை மன்றம் இன்று விடுத்த ஒர் அறிக்கையில்  வினவியது.

நெகிரி செம்பிலானில் தமது இரண்டு பிள்ளைகளையும் பிரிந்து சென்று விட்ட  கணவர் தமது ஒப்புதல் இல்லாமல் இஸ்லாத்துக்கு மதம் மாற்றி விட்டதைக் கண்டு  பிடித்துள்ளது தொடர்பில் அந்த மன்றம் அறிக்கை விடுத்துள்ளது.

இந்திய மாது ஒருவர் பிரிந்து சென்ற தமது கணவர் தமது இணக்கம் இல்லாமல்  தமது பிள்ளைகளை இஸ்லாத்துக்கு மாற்றி விட்டதால் அந்தப் பிள்ளைகளைப்  பராமரிக்கும் உரிமையை இழக்கும் சூழ்நிலையை எதிர்நோக்கிய விவகாரம் மீது  கடுமையான சர்ச்சை எழுந்த பின்னர் குழந்தைகளை ரகசியமாக மதம்  மாற்றுவதற்கு 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசாங்கம்  தடை விதித்தது.

 

TAGS: