‘பழனிவேலும் ஜாம்ரியும் தனிப்பட்ட முறையில் பேசி பிரச்னையை தீர்த்துக் கொள்ள வேண்டும்’

palaniபேராக் மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் பதவி மீது மஇகா தலைவர் ஜி  பழனிவேலுக்கும் மாநில மந்திரி புசார் ஜாம்ரி அப்துல் காதிருக்கும் இடையில்  பகிரங்கமாக நிகழும் வாக்குவாதம் பிஎன் -னுக்கு எந்த நன்மையையும் தரவில்லை  என அம்னோ தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார்.

“பகிரங்கமாக குறை கூறுவது போதும். பிரச்னை கட்டுமீறிச் செல்வதற்கு முன்னர்  மேசையில் சந்தித்து விவாதிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது,” என அம்னோ  மகளிர் தகவல் பிரிவுத் தலைவி ஹமிடா ஒஸ்மான் கூறினார்.palani1

பிஎன் குடும்பத்தில் அங்கம் என்ற முறையில் ஜாம்ரியும் பழனிவேலும்  இணக்கமான சூழ்நிலையில் பிரச்னையை விவாதிக்க வேண்டும். தங்கள்  எண்ணங்களை வெளிப்படுத்த அவர்கள் ஊடகங்களை பயன்படுத்தக் கூடாது  என்றும் அவர் சொன்னதாக மலாய் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் பதவி குறித்து மாநில அரசாங்கம் இன்னும் எந்த  முடிவும் செய்யாததால் ஜாம்ரியும் பழனிவேலும் பிரச்னைகளைத் தீர்க்க முடியும்  என ஹமிடா நம்புகிறார்.

palani2சபாநாயகர் பதவி கொடுக்கப்படா விட்டால் பேரா மாநில அரசாங்கத்தில் எல்லாப்  பதவிகளையும் மஇகா நிராகரிக்கும் என்றும் பழனிவேல் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் மஇகா கட்சித் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு பிரச்னைகளை திசை  திருப்புவதற்கு அந்த விவகாரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என ஜாம்ரி  பழனிவேலிடம் சொன்னார்.