EAIC ‘முன்னாள் எம்ஏசிசி அதிகாரி’ குறித்து எழுந்துள்ள சந்தேகத்தை விவாதிக்கும்

TBHபோலீஸ் தடுப்புக் காவல் மரணங்கள் மீதான EAIC என்ற நேர்மை ஆணைய  அமலாக்க நிறுவனத்தின் பணிக் குழு தனது உறுப்பியம் பற்றி இரண்டு எதிர்க்கட்சி  எம்பி-க்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அதனை விவாதிக்க  எண்ணியுள்ளது.

விரைவில் அதற்கான கூட்டம் நடைபெறும் என EAICயின் சட்ட, நிறுவனத்  தொடர்புத் துறை கூறியது.

முகமட் நாட்ஸ்ரி இப்ராஹிம் என்ற குழு உறுப்பினர் பணிக்குழுவுக்குப்
பொருத்தமானவராக தெரியவில்லை என நேற்று ஜைரில் கிர் ஜிஹாரி ( புக்கிட்  பெண்டேரா ), ஸ்டீவ் சிம் (புக்கிட் மெர்டாஜாம்) என்ற இரு எதிர்க்கட்சி  எம்பி-க்களும் தெரிவித்திருந்தனர்.

தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த தியோ பெங் ஹாக்-கிடமிருந்து  வாக்குமூலத்தை பதிவு செய்த நபராக முகமட் நாட்ஸிரி இருக்கக் கூடும் என  தாங்கள் நம்புவதாக அவர்கள் கூறினார்.TBH1

EAIC பணிக்குழுவில் உள்ள முகமட் நாட்ஸ்ரி அதே நபர் என்றால் அந்த  அமைப்பின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாக விடும் என ஜைரிலும் சிம்-மும்  வலியுறுத்தினர்.

முகமட் நாட்ஸ்ரி EAIC அமைப்பின் புலனாய்வு, தடுப்புப் பிரிவின் முதுநிலை  உதவி இயக்குநர் என அதன் இணையத் தளத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

மலேசியாகினி மின் அஞ்சல் வழி தொடர்பு கொண்ட போது அந்த இரண்டு
எம்பி-க்களும் கூறுவதை EAICயின் சட்ட, நிறுவனத் தொடர்புத் துறை மறுக்கவும்  இல்லை, உறுதிப்படுத்தவும் இல்லை.

இவ்வாண்டு போலீஸ் தடுப்புக் காவலில் பலர் மரணமடைந்ததைத் தொடர்ந்து என்  தர்மேந்திரன், ஆர் ஜேம்ஸ் ரமேஷ் ஆகியோரது மரணங்களை விசாரிக்க  பணிக்குழு ஒன்றை அமைக்கப் போவதாக EAIC அறிவித்தது.

 

 

TAGS: