புத்ராஜெயாவில் முன்பு இருந்த தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுடைய 100 பேராளர்கள் இன்று பிரதமர் அலுவலகத்திற்கு முன்பு கூடி, குறைந்த விலை வரிசை வீடுகளை கட்டித் தருவதாக தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாட்டின் நிர்வாகத் தலைநகரமான புத்ராஜெயாவை நிர்மாணிப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக அந்தத் தோட்டங்களிலிருந்து வெளியேறுமாறு அந்தத் தொழிலாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்களுடைய வரிசை வீடுகள் கட்டப்படும் வரை டெங்கிலில் உள்ள குறைந்த விலை அடுக்கு மாடி வீடுகளில் அவர்கள் குடியேற்றப்பட்டனர்.
ஆனால் கூட்டரசு அரசாங்கம் வாக்குறுதி அளித்த வீடுகளை கட்டித் தரவில்லை என அவர்கள் கூறிக் கொண்டனர். அதே வேளையில் அவர்கள் வசித்த அடுக்குமாடி வீடுகள் குடியிருப்பதற்கு பாதுகாப்பாக இல்லாத அளவுக்கு மோசமடைந்து விட்டன.
“டெங்கில் தாமான் பெர்மாத்தாவில் உள்ள அந்த அடுக்குமாடி வீடுகள் குடியிருப்பதற்குத் தகுதி இல்லாதது என அறிவிக்கப்பட்ட பின்னர் மக்கள் போராட்டத்தின் விளைவாக சிலாங்கூர் அரசாங்கம் அந்த முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலத்தை ஒதுக்கியது,” என Jaringan Rakyat Tertindas (Jerit) அமைப்பு தெரிவித்தது.
இப்போது அந்த நிலத்தில் வரிசை வீடுகளைக் கட்டித் தருமாறு அவர்கள் கூட்டரசு அரசாங்கத்தைக் கோருகின்றனர். காரணம் வரிசை வீடுகளை கூட்டரசு அரசாங்கம் மட்டுமே கட்ட முடியும் என அவர்கள் கருதுகின்றனர்.
அந்தப் பிரச்னையைத் தீர்க்க அரசாங்கம் ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க விட்டால் குடியிருப்பாளர்கள் பெரும் எண்ணிக்கையில் பிரதமர் அலுவலகத்தில் திரண்டு தங்கள் பிரச்னை தீரும் வரை முகாம் அமைத்துக் கொள்வர் என்றும் Jerit தெரிவித்தது.
இன்னும் 5 வருடங்கள் காத்திருங்கள். மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள் ஒட்டு கேட்க, மென்மேலும் புளுகு மூட்டைகளை அள்ளி விடுவதற்கு. பாவம் மறுபடியும் ஏமாந்து ஒட்டு போடுவீர்கள்! வாழ்க இந்தியர்கள் அரசியல்!