கல்வி பெருந்திட்டத்தை நிறுத்து: முஸ்லிம் தரப்புகள் வலியுறுத்து

blueprintமுஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒன்று, 2013-2025 கல்வி பெருந்திட்டம் அரசமைப்புக்கு விரோதமானது என்று குறிப்பிட்டு அதை நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

“தாய்மொழிப்பள்ளி விவகாரத்துக்கு கூட்டரசு அரசமைப்புப்படி தீர்வுக்காணப்படும்வரை   2013-2025 கல்வி பெருந்திட்டத்தை இரத்துச் செய்ய வேண்டுமாய் இஸ்லாம்-மலாயு என்ஜிஓகளின் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

“அப்பெருந்திட்டம் அரசமைப்புக்கு முரணானது என்பது தெளிவு. அதைச் செயல்படுத்துவது எல்லா மலேசியர்களும் விரும்பும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு மிரட்டலாம அமையும் என்று கவலை கொள்கிறோம்”, என அக்கூட்டமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரும் கிளப் வர்த்தாவான் மூடாவின் தலைவருமான  சுல்கர்னாய்ன் தாயிப் கூறினார்.

தாய்மொழிப்பள்ளிகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து உதவி செய்யும் என்று கல்வி துணை அமைச்சர் II பி.கமலநாதன் கூறியதையும் அவர் சாடினார். அவ்வாறு கூறுவது “சட்ட அதிகாரத்தை மீறும் செயல்”.

கல்வி பெருந்திட்டம் கல்வி அமைச்சர் தலைமையில் உருவாக்கப்பட்டு கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்டது.