போலீஸ் அதிகாரிகள் எல்லா கைதிகளையும் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரையில் நிரபராதிகள் என்பது போல நடத்துவதை உறுதி செய்வதற்கு புக்கிட் அமான் எல்லா முயற்சிகளையும் செய்யும்.
“எங்கள் காவலில் உள்ள கைதிகள் உட்பட அனைவருடைய நலன்களிலும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்,” எனத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் (NKRA) இயக்குநர் அயூப் யாக்கோப் கூறினார்.
சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் மாநில NKRA பற்றி விளக்கம் பெற்ற பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.
அந்தக் கோட்பாட்டை அனைத்து போலீஸ் அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
என்றாலும் போலீஸ் அதிகாரிகள் உண்மையிலேயே தொழில் ரீதியாக செயல்படுவதற்கு அவர்களுடைய அறிவாற்றலையும் நம்பிக்கை அளவையும் வலுப்படுத்த அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என அயூப் சொன்னார்.
“புக்கிட் அமானில் உள்ள நாங்கள் அதற்கான எல்லா உதவிகளையும் செய்வோம். அவர்களுக்கு தேவையான வசதிகளையும் கொடுப்போம். அவர்களுக்கு உத்தரவுகளை மட்டும் பிறப்பித்து விட்டு அவற்றை அமலாக்குவதற்கு வளங்களை வழங்காமல் இருப்பது நியாயமாக இருக்காது.”
லாக்கப்பில் காணப்படும் பிரச்னைகள் போன்ற போலீஸ் பணிகளில் நிலவும் நலிவுகள் குறித்த கருத்துக்களை ‘செவிமடுக்கும் போது வலி ஏற்படுகிறது’ எனக் கூறிய அயூப், மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு அவற்றுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றார் அவர்.
கதை சொல்ல வேண்டாம், வெளியே நடந்தாலும் கொலை, உள்ளே நடந்தாலும் கொலைதான். அதிலும் காவல்காரன் கொலை காரன் என்றால் மஹா வால்காரன் …..!