பிரபல சமய அறிஞரான அஸ்ஹார் இட்ருஸ், கிளந்தான் பிஎன் அதன் தேர்தல் முறையீட்டு மனுவில் அதன் தேர்தல் தோல்விக்கான காரணங்களில் தம் பெயரையும் சேர்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்க “வேடிக்கையாக” இருக்கிறது என்கிறார்.
தேர்தலின்போது அவர் ஓர் இஸ்லாமிய அரசை வீழ்த்துவது ஹராம் (தவிர்க்கப்பட்ட செயல்) என்று கூறினாராம். அதை பாஸ் தனது தேர்தல் பரப்புரைகளில் பயன்படுத்திக் கொண்டதாம்.
“இஸ்மாம் என்ற பெயரைக் கொண்ட எதனையும் வீழ்த்துவது தவிர்க்கப்பட்டது என்று சமய நூல்களில் கூறப்பட்டிருப்பதைத்தான் சொன்னேன்”, என்கிறாரவர்.
இதில் என்ன வேடிக்கை கிடக்கின்றது. இன்னும் அதிக வேடிக்கையை நீதிமன்ற முடிவு வந்த உடன் பாருங்கள். முடிவு எவ்விதமானாலும் சந்தி சிரிக்கப் போவது உன் இனமே!