சுல்கிப்லி: இசி நாடாளுமன்ற அதிகாரத்துக்குள் வரக் கூடாது

zulஇசி என்ற தேர்தல் ஆணைய ஆணையர்கள் நியமனம் நாடாளுமன்ற  அதிகாரத்துக்குள் கொண்டு வரப்பட்டால் அது ‘தேசத் துரோகமாகும்’ என பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டின் கூறுகிறார்.

இசி-யின் அமைப்பு அகோங்கின் தனிப்பட்ட உரிமை என்பதே அதற்குக் காரணம்  என அவர் சொன்னார்.

கூட்டரசு அரசமைப்பின் 114வது பிரிவைச் சுட்டிக் காட்டிய அவர் ஆட்சியாளர்  மாநாட்டுடன் ஆலோசனை கலந்த பின்னர் அகோங் இசி உறுப்பினர்களை   நியமிப்பதாகவும் அந்த விவகாரத்தில் நாடாளுமன்றம்  குறிப்பிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

“ஆகவே இசி நியமனத்தை உறுதி செய்யும் பொறுப்பு நாடாளுமன்றத்துக்கு  கொடுக்கப்பட வேண்டும் என்ற எதிரணி யோசனை அரசமைப்புக்கு முரணானது,  அகோங்கின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியாகும்.”

“அதனை வேறு வகையாகச் சொன்னால் அகோங்கிற்கும் மலாய்
ஆட்சியாளர்களுக்கும் இழைக்கப்படும் துரோகமாகும்,” என சுல்கிப்லி உத்துசான்  மிங்குவில் எழுதியுள்ளார்.