பக்காத்தான் ராக்யாட் அதிகமான வாக்குகளை பெற்றிருப்பதை ஒப்புக் கொண்ட நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் ‘தலைவிதி’ பிஎன் -னுக்கு சாதகமாக இருந்ததாக கூறுகிறார்.
சுருக்கமான சொன்னால் இறைவன் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறான். அதனால் பிஎன் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றது,” என அவர் சொன்னார்.
சபாவைக் கைப்பற்றுவதற்கு அன்வார் மேற்கொண்ட முயற்சியில் தாம் தோல்வி அடைந்து விட்டதை மறைப்பதற்காக இசி என்ற தேர்தல் ஆணைய ஆணையர்கள் விலக் வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதற்கு ‘505 கறுப்பு தின’ பேரணிகள் நடத்தப்படுவதாக அவர் உத்துசான் மிங்குவில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் வழங்கிய இந்த வாய்ப்பை தேசிய முன்னணி அரசாங்கம் நல்ல முறையில் பயன் படுத்த வேண்டும் .