மக்களவையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் தோல்வி காணும் என Universiti Kebangsaan Malaysia (UKM) அரசியல் அறிவியல் விரிவுரையாளர் பேராசிரியர் டாக்டர் சம்சுல் அடாபி மாமாட் சொல்கிறார்.
பிஎன் எம்பி-க்களிடம் நஜிப்புக்கு பெரும் செல்வாக்கு இருப்பதே அதற்குக் காரணம் என அவர் சொன்னார். ஆகவே அத்தகைய தீர்மானம் வெற்றி பெறும் சாத்தியமே இல்லை என்றார் அவர்.
நாட்டின் ஏழாவது பிரதமராகும் பொருட்டு ஆதரவு தேடி அம்னோ மூத்த
உறுப்பினரான தெங்கு ரசாலி பிஎன், பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்களை
சந்திப்பதாக ஜுன் 13ம் தேதி மலேசியா இன்சைடர் செய்தி இணையத் தளம் வெளியிட்ட செய்தி குறித்து சம்சுல் கருத்துரைத்தார்.
சரியான கணிப்பு இது. நஜிப்