‘கிளந்தான் தேர்தல் மனுக்கள் ‘வினோதமானவை’

islamகிளந்தான் பிஎன் தான் அந்த மாநிலத்தில் தோல்வி கண்டதற்கு கொடுத்துள்ள  காரணங்களில் ஒன்றாக தம்மை பெயர் குறிப்பிட்டுள்ளது ‘வினோதமாக’ உள்ளது  என பிரபல சமய அறிஞர் அஸ்ஹார் இட்ருஸ் வருணித்துள்ளார்.

இஸ்லாமிய அரசாங்கத்தை வீழ்த்துவது ஹராம் (தடுக்கப்பட்டுள்ளது) எனத் தாம் தேர்தலின் போது சொன்னதை பாஸ் கிளந்தானில் நடத்திய பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக அவர் சொன்னார்.

“நான் செராமாவில் பேசவில்லை. சமயப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதையே  நான் தெரிவித்தேன். இஸ்லாம் என்ற பெயரில் உள்ள எதனையும் நாம் வீழ்த்துவது  தடுக்கப்பட்டுள்ளது,” என அவர் திரங்கானுவில் சொன்னதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.