கோலாலும்பூர் இபிஎப் கட்டிடத்தில் நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானின் செய்தியாளர் கூட்டம் ஒன்று நடக்க விருந்தது. செய்தி சேகரிக்க மலேசியாகினியும் அங்கு சென்றது.
இபிஎப் தலைமையகத்துக்கு வருகை புரிந்த அஹ்மட், வருகை முடிந்து செய்தியாளர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மலேசியாகினி செய்தியாளர்கள் காத்திருந்த இடத்துக்கு முதலில் அனுமதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொள்ள அதற்கு அனுமதி இல்லை என்று கூறி வெளியேற்றப்பட்டது. இப்படி நடப்பது முதல்முறை அல்ல.
அவர்களுக்கு
உங்களை
கண்டால்
p-y-m.கவலையை விடுங்கள்
உண்மையை கூறும் ஒரு ஊடகம் மலேசியா கினி,அதை கண்டாலே திருடன் போலீசை கண்டது போல பயப்படுவான் ஊழலை செய்யும் தலைவர்கள் ஆனால் , நீங்களும் தமிழ்
பத்திரிகை ஆசிரியர்கள் போல காசை வாங்கினால் கண்டிப்பாக
உங்களுக்கும் செய்தி சேகரிக்க அனுமதி கிடைக்கும் ,ஆனால் நீங்கள் நேர்மைவாதியாக இருக்கிறீர்கள் , எப்படி நைனா சமாளிக்க போகிறீர்கள் .
கேள்விக் கணைகள் தொடுக்கும் செய்தியாளர்களைக் கண்டால் இந்த அமைச்சருக்கு நடுக்கமோ? சொன்னதை அப்படியே கிளிப் பிள்ளை போல் பத்திரிகையில் போட்டு விட்டால் போதும். இதனாலேயே இன்றைய “பிரதான” செய்தி நாளேடுகளின் வாசகர்கள் கூட்டம் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி விட்டது. காரணம் “கழுதை”களின் செய்தியைப் போட்டுக் கொண்டே இருந்ததால்!