ஐநா தீர்மானங்களை மதித்தால் வடகொரியாவுடன் பேசுவோம்:அமெரிக்கா

pyongyang_leadershipவட கொரியாவின் அணுத் திட்டங்கள் தொடர்பில் அந்நாட்டுடன் அமெரிக்கா பேசத் தயார், ஆனால் அதற்கு வடகொரிய அரசு ஐநா பாதுகாப்பு சபைத் தீர்மானங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் அலுவலகம் கூறுகிறது.

பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்கா உயர் மட்ட அளவில் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வடகொரியா முன்வைத்த ஒரு யோசனைக்கு பதிலளிக்கையில் அமெரிக்கா இவ்வாறு கூறியது.

முன்-நிபந்தனை எதுவும் இல்லாமல் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டிருந்த வடகொரியா, அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் பற்றியும் இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.

கொரிய தீபகற்பத்தில் இவ்வாண்டில் முன்னதாக வடகொரியா அணுகுண்டுப் பரிசோதனை ஒன்றை நடத்தியதோடு, அமெரிக்கா மீது அணுகுண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அச்சுறுத்தியும் இருந்ததை அடுத்து பதற்றம் அதிகரித்திருந்தது.