மசீச கொள்கைகளுக்கு ‘கீழ்ப்படியாததற்காக’ தமக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக கூடிய கட்சியின் மத்திய ஒழுங்கு நடவடிக்கைக் குழு எடுக்கும் முடிவை முன்னாள் மசீச தேசிய அமைப்புச் செயலாளர் தீ கியூ கியோங் ஏற்றுக் கொள்வார்.
ஆனால் தாம் ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றார் அவர்.
13வது பொதுத் தேர்தலில் மோசமான அடைவு நிலையைப் பெற்றதைத் தொடர்ந்து அரசாங்கப் பதவிகளை ஏற்பதில்லை என்ற மசீச முடிவுக்கு எதிராக தீ அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார்.
ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் ஐந்து உறுப்பினர்களும் ஏகமனதாக முடிவுக்கு வந்துள்ளதாக குழுத் தலைவர் மைக்கல் சென் கூறினார்.
என்றாலும் அவர் கட்சி அமைப்பு விதிக்கு ஏற்ப அந்த முடிவை அறிவிக்கவில்லை.
ஜோகூர் சுல்தானுடைய தனியுரிமையை மதிக்கும் வகையிலும் அதே வேளையில் பதவிகளை ஏற்பதில்லை என்ற தனது முடிவில் மசீச தீவிரமாக இருக்கிறது என்பதைக் காட்டும் வகையிலும் குழு ஒரு தீர்வைக் காண வேண்டியிருந்ததாக சென் சொன்னார்.