தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டி கூடாது என்பதை அம்னோ உச்சமன்றம் ஏற்கனவே தீர்மானித்து விட்டது.
இதை உறுதிப்படுத்திய கட்சி தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், அப்படி இருக்கையில் உச்சமன்ற உறுப்பினர் இட்ரிஸ் ஜூசோ அம்முடிவு “ஜனநாயகமற்றது” எனக் கூறுவது வியப்பாக இருக்கிறது என்றார்.
“உச்சமன்றக் கூட்டத்தில் அது பற்றி விவாதிக்கப்பட்டபோது அவரும் இருந்தார். அப்போது மறுப்புத் தெரிவிக்கவில்லையே”, என்றார்.
சனிக்கிழமை இட்ரிஸ் ஜூசோ போட்டி கூடாது என்பது நல்லதுதான். ஆனால், பொதுமக்கள் அதை ஜனநாயகமற்ற முடிவு என்று கூறுவார்கள் என்று சொல்லி இருந்தார்.
-மலாய் மெயில்