இந்த நாட்டில் உள்ள எல்லா 523 தமிழ்ப் பள்ளிக் கூடங்களும் முழு உதவியைப் பெற வேண்டும் எனப் பிரகடனம் செய்யும் பொருட்டு பிரதமர், துணைப் பிரதமர், அரசாங்கம் ஆகிய தரப்புக்களுக்கு எதிராகத் தாங்கள் தாக்கல் செய்த வழக்கை இரண்டு வழக்குரைஞர்கள் இன்று மீட்டுக் கொண்டனர்.
அந்த வழக்கை மேலும் தொடருவதில்லை என முன்னாள் கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினர் எம் மனோகரன், பி உதயகுமார் ஆகிய இரு வழக்குரைஞர்களும் முடிவு செய்துள்ளதாக அவர்களைப் பிரதிநிதித்த வழக்குரைஞர் அகமட் சையட் அகமட் ஜுபிர் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி விடி சிங்கத்திடம் தெரிவித்தார்.
அந்த வழக்கில் பிரதிவாதிகளைப் பிரதிநிதித்த முதுநிலை கூட்டரசு வழக்குரைஞர் எபாண்டி நாஸிலா அப்துல்லா ஆட்சேபம் தெரிவிக்காததால் வழக்கை மீட்டும் கொள்ளும் விண்ணப்பத்தை சிங்கம் பதவி செய்தார்.
தாமும் உதயகுமாரும் வழக்கை மீட்டுக் கொண்டதற்கான காரணத்தை பின்னர் தொடர்பு கொண்ட போது தெரிவிக்க மனோகரன் மறுத்து விட்டார்.
அவரவர் சுய நலம்தானே காரணம்? தனக்கு வேண்டியது கிடைக்காவிட்டால் எவென் செத்தா என்ன? பொழச்சா என்ன?
மனோகரன் மனைவி சொல்லை கேட்பவர் அவர் மக்களுக்கு முக்கியதுவம் கொடுப்பவர் அல்ல மனைவி சொல்லுக்கு கட்டுப்பட்டு மக்களிடையே செல்வாக்கை இழந்த இன்னொரு MIC சாயல் கொண்ட சுயநல தலைவன் நன்று உன்னை எங்கள் கட்சியின் YB யாக தேர்டேடுக்கததுக்கு .
பேசுற மத்தவங்க ஏன் இதை செய்யவில்லை?
ஐயோ இவனுங்க டிராமா ஓரளவு மக்களுக்கு தெரிஞ்சி போச்சி , அதான் அடங்கி போய் இருங்காங்க , இப்போ இவனுங்க போராட்டம் பணம் பணம் பணம் ……………
எல்லாம் நாடக மேடை , அதில் எங்கும் நடிகர் …..
மனோகரன் உதயா பெரும் ஏமாற்றம் ….!
உங்களுக்கும் அரிசி மூட்டை காரனுக்கும் , ச்சே ,…..ச்சே …..!