அடுத்த ஆண்டு இறுதிக்குள் சிலாங்கூரில் முதலாவது ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தப் போவதாக ஊராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பேற்றுள்ள புதிய ஆட்சி மன்ற உறுப்பினர் தெங் சாங் கொம் சூளுரைத்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களை உருவாக்க சிலாங்கூர் வகுத்துள்ள ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒரு பகுதியாக தாமும் அரசாங்கமும் அந்தக் காலக்கெடுவை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.
“நான் அந்தக் காலக்கெடுவுக்குள் அதனைச் செய்ய முடியா விட்டால் நான் பதில் சொல்வேன், என்றார் அவர்.
“அதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு விட்டது. ஒராண்டுக்கு முன்னரே அது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். சில கேள்விகள் எழுந்ததால் அது மீட்டுக் கொள்ளப்பட்டது,” என தெங் மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் சொன்னார்.
நகராண்மை கழகமும் ,ஊராட்சி மன்றதிக்கும் தேர்தல் வந்தால் கட்சியில் பிளவு தோன்றும் உழைக்காதவர்கள் மீண்டும் பணம் கொடுத்து பதவிக்கு வந்துவிடுவார்கள் பிறகு உழைத்தவர்கள் பாதிப்பு அடைந்து விடுவார்கள் ஆகவே இதன் விபரம் நோக்கம் தெளிவாக தெரிந்துக் கொள்ளவேண்டும் அவைசரப் பட வேண்டாம் சிந்தித்து செயல்படுங்கள் .