எம்ஆர்டி: ஜாலான் சுல்தான் கட்டிடங்கள் உடைபடமாட்டா

கோலாலம்பூரில் 10 கிலோமீட்டர் நீளத்துக்குத் தரையடி எம்ஆர்டி சுரங்கப்பாதைக் கட்டும் பணிக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாலான் சுல்தானில் உள்ள எந்தவொரு கட்டிடமும் உடைக்கப்படாது.

இந்த உத்தரவாதத்தை பிரதமர்துறை துணைஅமைச்சர் அஹ்மட் மஸ்லான் இன்று நாடாளுமன்றத்தில் கேள்விநேரத்தின்போது அளித்தார்.

அவ்வட்டாரத்தில் உள்ள குடியிருப்பாளர் குழுக்கள் எம்ஆர்டி-க்கு மாற்றுப் பாதை ஒன்றையும் பரிந்துரைத்திருந்தனர். ஆனால் அது சாத்தியப்படாத ஒன்று என்பதாலும் எம்ஆர்டி-இன் தேவைக்கேற்ப இல்லை என்பதாலும் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.