கேஎல்ஐஏ2 விமான நிலையத்தைக் கட்டி முடிக்கும் பணி தாமதமடைந்திருப்பதால் அதன் குத்தகை நிறுவனத்துக்கு மலேசிய விமான நிலைய ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) கடும் அபராதம் விதித்துள்ளது. ஜூன் 16 தொடங்கி தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் அந்நிறுவனம் ரிம199,445. 40 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
குத்தகை நிறுவனமான யுஇஎம்சி-பீனா புரி கூட்டு நிறுவனம் ஜூன் 15-க்குள் பிரதான முனையக் கட்டிடத்தைக் கட்டிமுடிக்கத் தவறிவிட்டது என எம்ஏஎச்பி கூறியது.
குறைந்த கட்டண விமானச் சேவைக்கான அந்த விமான நிலையம் 90 விழுக்காடுதான் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி ஏற்பட்ட பிரச்னைகளின் காரணமான அதற்கான செலவு ரிம 1.7 பில்லியனிலிருந்து ரிம4 பில்லியனாக உயர்ந்துள்ளது.
அதில் எத்தனை பில்லியன் அம்னோவிற்கு போனது????