முன்னாள் பொறியாளரான பி.கருணாநிதி தடுப்புக் காவலில் இறந்தது பற்றி விசாரிக்க போலீசார் சுயேச்சை விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என அவரின் குடும்பத்தார் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
“அவர் போலீஸ் காவலில் இருந்தபோது போலீசால் அடிக்கப்பட்டதால்தான் இறந்தார் என சந்தேகிக்கிறோம்”, என அக் குடும்பம் இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் வழங்கிய மகஜரில் கூறியுள்ளது.
அம்மகஜர் நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் ஒஸ்மான் சாலேமீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய போலீஸ் தலைவர் காலிட் அபு பக்காரைக் கேட்டுக்கொண்டுள்ளது. அவர், கருணாநிதியின் உடலில் காயம் எதுவும் இல்லை என்று சொன்னாராம்.
ஆனால், சவப் பரிசோதனையின்போது அவரது உடலில் 49 காயங்கள் இருந்தது தெரிய வந்தது.
அரசாங்கம் சுயேச்சை விசாரணை குழுவை அமைத்து தர்மத்தை நிலை நாட்ட வேண்டும்.
ஆ! தமிழக கருணாநிதி மாண்டுவிட்டாரா !!!!!!!!!!!!!!!!!!