கோலாலம்பூர் ‘505 கறுப்பு தின’ பேரணிக்கு ஒன்று கூடும் இடங்கள்

blackபக்காத்தான் ராக்யாட், அரசு சாரா அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோர்  கோலாலம்பூரில்  சனிக்கிழமை ஏழு இடங்களில் ஒன்று கூடி ‘505 கறுப்பு தின’ பேரணிக்காக’  பாடாங் மெர்போக் திடலை நோக்கிச் செல்வர்.

ஒன்று கூடும் இடங்கள்:

பிரிக்பீல்ட்ஸ், தேசியப் பள்ளிவாசல், ஜாலான் புடு, ஜாலான் ராஜா லாவுட்டில்  இரண்டு இடங்கள், மலாயாப் பல்கலைகழகம், பெகெலிலிங்.

13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகளையும்  மோசடிகளையும் எடுத்துரைப்பதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட பேரணிகளில்  கோலாலம்பூர் பேரணியும் ஒன்றாகும்.

இசி என்ற தேர்தல் ஆணையத்தின் இரண்டு உயர் தலைவர்களும் பதவி விலக  வேண்டும் என நெருக்குதல் கொடுப்பதும் பேரணியின் நோக்கமாகும்.

அந்தத் திடல் மலேசிய ஒலிம்பிக் மன்றம் தனது ஞாயிற்றுக் கிழமை நிகழ்வுக்கு  சனிக்கிழமை ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதால் அதனை தர முடியாது  என கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் ஏற்கனவே கூறியுள்ளது.

அரங்கம் ஒன்றில் பேரணியை நடத்துமாறு அதிகாரிகள் நெருக்குதல் கொடுத்த  போதிலும் பக்காத்தான் தனது முடிவை மாற்றிக் கொள்ள மறுத்துள்ளது.